வடபழனி முருகன் ஆவணி கிருத்திகை வழிபாடு: நேரலையில் பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08செப் 2020 03:09
சென்னை : சென்னை வடபழனி முருகன் கோவிலில் ஆவணி மாத கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டதை தொடர்ந்து நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஆவணி கிருத்திகை விழா மாலை 5 முதல் தினமலர் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.