பரங்கிப்பேட்டை; பரங்கிப்பேட்டை மெயின்ரோடு ஸ்ரீ செல்வ விநாகயர் கோவிலில், விநாயகர் சதுர்த்தி உற்சவ நிறைவு விழா நடந்தது.அதை முன்னிட்டு, விநாயகருக்கு, சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து, பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.