பதிவு செய்த நாள்
09
செப்
2020
09:09
சபரிமலை : கொரோனா காரணமாக, சபரிமலை மண்டல - மகரவிளக்கு சீசனில், தினசரி, 5,௦௦௦ பக்தர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று, அரசுக்கு டாக்டர்கள் குழு பரிந்துரைத்துள்ளது.
கொரோனா பரவலால்,மார்ச் முதல் சபரிமலையில், பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. அனைத்து தமிழ் மாதங்களிலும் நடை திறக்கப்பட்டு, பக்தர்களின்றி பூஜைகள் நடைபெற்றன. நவம்பர், 16ல் தொடங்கும் மண்டல - மகரவிளக்கு சீசனில், கட்டுப்பாடுகளுடன் பக்தர்களை அனுமதிக்க, கேரள மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக நிபுணர்களிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளது.டாக்டர்கள் குழு சமர்ப்பித்த அறிக்கையில், அதிகபட்சமாக தினசரி, ௫,௦௦௦ பக்தர்களை அனுமதிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், போலீஸ் தரப்பில், தினமும், 5,௦௦௦ பக்தர்களை மட்டும் அனுமதித்தால் போதுமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், கார்த்திகை மாதம் முன்பதிவு கிடைத்தவர்கள் மட்டுமே, மாலை அணிந்து விரதத்தை தொடங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.இதுதொடர்பாக, முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் பக்தர்கள் எண்ணிக்கை, முன்னெச்சரிக்கை நடவடிக்கை, கொரோனா பரிசோதனை வசதி குறித்து ஆராய்ந்து இறுதி முடிவு எடுக்கப்பட்டு, ஆன்லைன் முன்பதிவு தொடங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.