பதிவு செய்த நாள்
09
செப்
2020
04:09
ஆர்.கே.பேட்டை : ஆவணி மாதம் நான்காம் வாரம் கொண்டாடப்படும் கிராம தேவதை ஜாத்திரை உற்சவம், நேற்று கொண்டாடப்பட்டது. அம்மனுக்கு கும்பம் படைத்து, பக்தர்கள் தங்களின் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். ஆர்.கே.பேட்டை மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில், கிராம தேவதைக்கு ஜாத்திரை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கான பூஜை, ஞாயிற்றுக்கிழமை, எல்லை பொங்கல்படையலுடன் துவங்கியது. ஆர்.கே.பேட்டை பொன்னியம்மன் கோவிலில், மாவிளக்கு படையலுடன், பெண் பக்தர்கள் தங்களின், மூன்று நாள் விரதத்தை துவக்கினர்.நேற்று காலை, வீடுகளில் அம்மனுக்கு சிறப்பு பூஜையும், இரவு, 10:00 மணியளவில், கும்பம் படையலும் நடத்தப்பட்டது. இன்று, காலை, 6:00 மணியளவில், கங்கையம்மனை, நீர்நிலையில் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.