பதிவு செய்த நாள்
09
செப்
2020
04:09
திருப்போரூர் : ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில், நேற்று முதல், கிருத்திகையையொட்டி, திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், பக்தர்கள் வழிபாடு செய்தனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், கடந்த மார்ச் மாதம் முதல், ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. தொடர்ந்து, கடந்த, செப்., 1ம் தேதி முதல், வழிபாட்டு தளங்கள் திறப்பு, அரசு பஸ்கள் இயக்கம் என, பல கட்ட தளர்வுகள் அளிக்கப்பட்டன.இந்நிலையில், ஊரடங்கு தளர்வுக்கு பின், நேற்று, திருப்போரூர் கந்தசுவாமிகோவிலில், முதல் கிருத்திகையில் பக்தர்கள் வழிபாடு செய்தனர்.சென்னை உட்பட பல இடங்களிலிருந்து வந்த பக்தர்கள் மொட்டை அடித்து சரவண பொய்கையில் நீராடினர். பின், நீண்ட வரிசையில் நின்று கந்தனை வழிபட்டு சென்றனர்.