Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மகாளய அமாவாசைக்கு கிளம்புவோமா! மனநிறைவே செல்வம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
வாஞ்சியம் வந்தால் மரணபயம் இல்லை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 செப்
2020
06:09

மரணபயம் உள்ளவரா... கணவன், மனைவி கருத்துவேறுபாடா.... உடனே திருவாரூர் மாவட்டம் ஸ்ரீவாஞ்சியத்தில் உள்ள வாஞ்சிநாதேஸ்வரர், எமதர்மனை தரிசியுங்கள்.  
‘எத்தனையோ பதவிகள் இருக்க தனக்கு மட்டும் உயிரை பறிக்கும் பதவியை சிவபெருமான் கொடுத்துள்ளாரே’ என வருந்தினார் எமதர்மன். ‘ ஸ்ரீவாஞ்சியத்தில் தவமிருந்தால் சிவனருளால் உன் வருத்தம் தீரும்’ என அசரீரி ஒலித்தது. தவமிருந்த அவருக்கு மாசிமாத பரணி நட்சத்திரத்தன்று காட்சியளித்து, ‘‘ வரும் காலத்தில், ஒருவரின் உயிர் போவதற்கு நோய், முதுமை, விபத்து என காரணம் சொல்வார்களே தவிர உன்னை பழிக்க மாட்டார்கள். பாவமும் சேராது. இங்கு வருபவர்கள் உன்னை முதலில் தரிசிப்பர்’’ என வரம் அளித்தார். கைகளில் பாசக்கயிறு, கதாயுதம், சூலம் ஏந்தி இடக்காலை மடித்தும், வலதுகாலைத் தொங்கவிட்டும் அமர்ந்தபடி இருக்க அவர் அருகில் சித்ரகுப்தன் உள்ளார். எமதர்மனுக்கு வடை மாலையும், ஆயுள் ஹோமமும் நடத்துகின்றனர்.
மூலவரான வாஞ்சிநாதேஸ்வரர் (சிவன்)  சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அம்மனை மங்களநாயகி என அழைக்கின்றனர். 110 அடி உயரம் கொண்ட ராஜ கோபுரம் ராஜேந்திர சோழன் கட்டியுள்ளார். இத்தலத்திற்கு சென்றால் நுாறு முறை காசிக்கு சென்ற பண்ணியம் கிடைக்கும்.  இங்குள்ள குப்தகங்கையில் கார்த்திகை மாத  ஞாயிறன்று நீராடினால் பாவம் தீரும். மாசிமகத் திருவிழாவின் இரண்டாம் நாளில் மட்டும் வாஞ்சிநாதேஸ்வரர், எமதர்மனை ஒருசேர தரிசிக்கலாம்.    
ஒருசமயத்தில் மகாவிஷ்ணுவை விட்டு மகாலட்சுமி பிரிந்திருந்தாள். பூலோகம் வந்த மகாவிஷ்ணு இங்கு சிவபெருமானை வழிபட்ட பின்னரே மகாலட்சுமியுடன் சேர்ந்தார். பைரவர், வெண்ணெய் விநாயகர்,  முருகன், சனீஸ்வரர், ராகு, கேதுவுக்கு சன்னதிகள் உள்ளன. கிரகணத்தின் போது மூலவருக்கு கிரகண அபிேஷகம் நடக்கிறது. தினமும் திருவாஞ்சியம் என மூன்று முறை சொன்னால்  நம் பாவம் குறையும்.   
செல்வது எப்படி?
* திருவாரூரில் இருந்து 15 கி.மீ.,
* கும்பகோணத்தில் இருந்து 35 கி.மீ.,
விசேஷ நாள்: ஆடிப்பூரம், கார்த்திகை ஞாயிறு, மாசி மகம், மகாசிவராத்திரி
நேரம்: காலை 6:00  – 12:00 மணி, மதியம் 3:00 –  8:00மணி     
தொடர்புக்கு 04366  – 291 305, 94424 03926
அருகிலுள்ள தலம்: திருவாரூர் தியாகராஜர் கோயில் 15 கி.மீ.,    

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
மனநலம், உடல்நலம் சிறக்கும். ஆயுள் அதிகரிக்கும். மரணபயம் ... மேலும்
 
குறைந்தது 9ல் ஆரம்பித்து 11,13, என ஒற்றைப்படையாக இருக்க ... மேலும்
 
ஆசையை குறைக்க வேண்டும் என்பது இதன் ... மேலும்
 
படுக்கும் முன் திருநீறு பூசி சிவன், துர்க்கையை ... மேலும்
 
இருக்க கூடாது. இறப்பு வீட்டில் காரியம் நடக்கும் போது மட்டும் இதை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar