* போதும் என்ற மனம் இருப்பதே பெருஞ்செல்வம். * செல்வம் என்பது பொருட்களை அதிகமாக சேர்ப்பது அல்ல. * தீர விசாரித்து தர்மவழியில் தீர்ப்பளியுங்கள். * செல்வச் செழிப்பிலும் இறைவனை நினைக்க மறவாதே. * யாசிப்பவனுக்கு ஏதாவது கொடுங்கள். அது காய்ந்த உணவாக இருந்தாலும் சரியே. * நதிக்கரையில் இருந்தாலும் கூட தண்ணீரை வீணாக்காதீர். * குவிந்து விட்ட பொருள் எல்லாம் செல்வம் இல்லை. ஆன்மிகச் செல்வமே செல்வம். * பெருமைக்காக ஆடை அணிந்தால் வறுமை உண்டாகும். * வீண்செலவும், ஆடம்பரமும் இல்லாத முறையில் உண்ணுங்கள். நபிகள் நாயகம்