தீமைகள் கேடு விளைவிப்பவை. முள் செடிகளில் இருக்கும் முட்கள் எப்படி தொடுபவரை காயப்படுத்துமோ அதுபோல் மனதில் தோன்றும் தீய எண்ணங்கள் பிறரை காயப்படுத்தும். மனதில் தீய எண்ணத்திற்கு இடமளித்தால் நம்மிடம் உள்ள நற்பண்புகளை அழித்து விடும். பின்னர் எதிர்காலத்தில் நம்மை படுகுழியில் தள்ளிவிடும். உங்களில் ஒருவர் வெறுப்பான காரியத்தை கண்டால் தன் கையால் தடுக்கட்டும். அதற்கு முடியாவிட்டால் பேசித் தடுக்கட்டும். அதற்கும் முடியாவிட்டால் உள்ளத்தால் வெறுக்கட்டும். இல்லாவிட்டால் வேதனை உங்கள் மீது இறங்கும். பிறகு உங்களின் பிரார்த்தனை ஏற்கப்படாது. தீய செயல்கள் செய்வதை ஒருபுறம் தடுத்தாலும், அதற்கு ஈடாக நல்ல செயல்களில் ஆர்வம் காட்ட வேண்டும். நண்பர்கள், சகோதரர்கள், உறவினர்கள் என அவர்களையும் நற்செயலில் ஈடுபடத் துாண்ட வேண்டும்.