பதிவு செய்த நாள்
20
செப்
2020
03:09
மாமல்லபுரம் : கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு காரணமாக, திருப்பதி பிரம்மோற்சவத்தில், தமிழக ஆன்மிகசபைகளின் சேவை தவிர்க்கப்பட்டு உள்ளது.
ஆந்திர மாநிலம், திருப்பதி, வெங்கடேசப் பெருமாள் கோவிலில், ஆண்டுதோறும் பிரம்மோற்சவங்கள் நடக்கின்றன.புரட்டாசி மாத பிரம்மோற்சவத்தில், தமிழக ஹிந்து சமய அறநிலைய, ஆளவந்தார் அறக்கட்டளை, பிற பகுதிகளின், வைணவ ஆன்மிக சபைகள், திருப்பதி கோவிலில் கைங்கர்ய சேவையாற்றி, அன்னதானம் வழங்கும்.இச்சேவைக்கும், கைங்கர்ய குழுவினர் தங்கவும், கோவில் நிர்வாகம், முறையான அனுமதி வழங்கும். இந்நிலையில், இன்று பிரம்மோற்சவம் துவங்கி, 27ம் தேதி வரை, நடைபெறுகிறது. இதில் பங்கேற்க, பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.தவிர, கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு காரணமாக, ஆளவந்தார் அறக்கட்டளை, பிற ஆன்மிக சபை கைங்கர்ய சேவைகளையும், கோவில் நிர்வாகம் தவிர்த்து உள்ளதாக, ஒரு சபையினர் தெரிவித்தனர்.