புவனகிரி: புவனகிரி ராகவேந்திரர் கோவிலில், புரட்டாசி சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.இதனையொட்டி, நேற்று காலை ராகவேந்திரருக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிேஷகம் நடந்தது. பின், ராகவேந்திரர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பூஜைகளை மந்த்ராலயத்தின் மரபின்படி கோவில் அர்ச்சகர்கள் ரகு, ரமேஷ் தலைமையிலான குழுவினர் செய்தனர். ஏற்பாடுகளை அறங்காவல் குழு செயலர் உதயசூரியன் குழுவினர் செய்திருந்தனர்.பக்தர்கள் பெருமளவில் சமூக இடைவெளி விட்டு, முககசம் அணித்து பங்கேற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.