செஞ்சி: செஞ்சி அடுத்த சிங்கவரம் மலை மீதுள்ள ரங்கநாதர் குடைவறைகோவிலில் நேற்று புரட்டாசி சனிக் கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. அதனையொட்டி, உற்சவர் ரங்கநாதர், பூதேவி,ஸ்ரீதேவிக்கு, அரங்கநாயகி தாயார், விஷ்ணு துர்க்கைக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாதருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.செஞ்சி பீரங்கிமேடு அருணாச்சலேஸ்வரர் கோவில் வெங்கடேச பெருமாளுக்கு புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு காலை 7:00மணிக்கு சிறப்பு திருமஞ்சனமும், அலங்காரமும் செய்தனர். 9 :00 மணிக்கு மகா தீபாராதனையும் நெய் வேத்யம் செய்தனர். இதேபோல் தாயாருக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.