ஈவான்ஸ் என்பவர் செருப்பு தைக்கும் தொழிலாளி இருந்தார். அவரிடம் ஒருநாள் காலையில். ‘‘ஈவான்ஸ்... நாளை உன் வீட்டிற்கு வரவிருக்கிறேன்’’ என ஆண்டவரின் குரல் கேட்டது. மறுநாள் ஆவலுடன் காத்திருந்தார். அப்போது தெருவில் முதியவர் ஒருவர், ‘‘ எனக்கு பசிக்கிறது. சாப்பிட ஏதாவது கிடைக்குமா’’ எனக் கேட்டார். அவருக்கு ரொட்டித் துண்டுகளை கொடுத்தார் ஈவான்ஸ். சில மணி நேரம் கழிந்தது. சிறுவன் ஒருவனைத் துரத்தியபடி பாட்டி ஒருத்தி வீட்டு வாசலுக்கு வந்தாள். சிறுவன் அவளிடமிருந்த ஆப்பிளை திருடியதே விரட்டியதற்கு காரணம். அவன் ஒரு அனாதை என்பதை புரிந்த கொண்ட ஈவான்ஸ், ‘‘பாட்டி... அவனைத் தண்டிக்காதீர்கள். அவனும் உங்களின் பேரன் மாதிரி தானே. அவனது தவறை பொறுத்துக் கொள்ளுங்கள்’’ என சமாதானப்படுத்தினார். மாலை நேரமானது. ஈவான்ஸ் ஆண்டவர் இன்னும் வரவில்லையே என ஏங்கி நின்றார். அப்போது இளம்பெண் ஒருத்தி குழந்தையுடன் தெருவில் சென்றாள். பனிப்பொழிவால் அவள் நடுங்குவதை கண்ட பழைய போர்வை ஒன்றை கொடுத்தனுப்பினார். அன்றிரவு மீண்டும் ஆண்டவரின் குரல் ஒலித்தது. ‘‘ஈவான்ஸ்.... உன்னை இன்று மூன்று முறை சந்திக்க வந்தேன். ஒவ்வொரு முறையும் கனிவுடன் உபசரித்தாய்’’ என மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். எளியவர் மீது இரக்கம் காட்டுவது ஆண்டவர் மீது அன்பு காட்டுவதற்கு சமம்.