யூத இனத்தைச் சேர்ந்த பரிசேயர் தலைவர் ஒருவரின் வீட்டில் விருந்துண்ணச் சென்றார் இயேசு. விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் இடம் பிடிக்க ஓடுவதை கண்டார். “யாராவது உங்களை விருந்துக்கு அழைத்தால், முதன்மையான இடத்தில் போய் உட்காராதீர்கள். ஏனெனில் உங்களைவிட அந்தஸ்து மிக்கவர்களும் விருந்துக்கு அழைக்கப்பட்டிருக்கலாம். அப்போது விருந்தளிப்பவர், ‘ உங்களுக்கான இடத்தை விட்டுக் கொடுங்கள்’ எனக் கேட்க வேண்டிவரும். அப்போது வெட்கத்துடன் இடத்தை விட்டு செல்ல நேரிடும். எனவே கடைசி இடத்தில் போய் உட்காருங்கள். அப்போது விருந்தளிப்பவர், ‘‘நண்பரே...முதன்மையான இடத்தில் அமர்ந்து விருந்துண்ணுங்கள்’’ என அழைத்தால் அது உங்களுக்கு கவுரவமாக இருக்கும். தன்னைத் தான் உயர்த்தும் எவனும் தாழ்த்தப்படுவான். தன்னைத் தான் தாழ்த்தும் எவனும் உயர்த்தப்படுவான்.