புரட்டாசி அமாவாசைக்கு மறுநாள் நவராத்திரி துவங்குவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு புரட்டாசியில் இரண்டு அமாவாசை வருகின்றன. இதில் 2வது அமாவாசையின் மறுநாளில் தான் சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும் ‘ஆஸ்வீஜம்’ மாதம் பிறக்கிறது. அதனால் ஐப்பசியில் நவராத்திரி நடத்தப்படுகிறது.