Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஏழு அம்மன்களை ஒரே இடத்தில் தரிசிக்க ... அமாவாசை விரதம்: முன்னோர், குலதெய்வத்தை வழிபட குறைகள் நீங்கும்! அமாவாசை விரதம்: முன்னோர், ...
முதல் பக்கம் » துளிகள்
நினைத்த காரியத்தை நிறைவேற்றி தரும் வீர கணபதி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நினைத்த காரியத்தை நிறைவேற்றி தரும் வீர கணபதி

பதிவு செய்த நாள்

17 மார்
2026
11:03

உத்தர கன்னடா மாவட்டம் கார்வாரின் அமதள்ளி கிராமத்தில் அமைந்து உள்ளது ஸ்ரீ வீர கணபதி கோவில். பல ஆண்டுகளுக்கு முன், இக்கிராமத்தை சேர்ந்த ஒருவரின் கனவில் தோன்றிய விநாயகர், ‘இப்பகுதில் நான் குடிகொண்டிருக்கிறேன்’ என்று கூறிவிட்டு மறைந்தார்.


கண் விழித்த அவர், கிராமத்தினரிடம் கூறினார். அவர்களும் விநாயகர் சொன்ன இடத்துக்கு மறுநாள் சென்றனர். அங்கு சுயம்பு வடிவமாக விநாயகர் விக்ரஹத்தை கண்டுபிடித்தனர். இது, இறைவனின் சித்தம் என்பதை உணர்ந்த கிராமத்தினர், ஆன்மிக சக்தி நிறைந்த இப்பகுதியில் விநாயகருக்கு சிறிய கோவில் கட்டினர். இக்கோவிலுக்கு, ‘வீர கணபதி கோவில்’ என்றும் பெயரிட்டனர். தொடர்ந்து பல ஆண்டுகளாக இங்குள்ள மக்கள் தரிசித்து வருகின்றனர். கடந்த, 1984ல் இக்கோவில் பக்தர்கள் வசதிக்காக சீரமைக்கப்பட்டது. தற்போது இக்கோவில், இப்பகுதியில் முக்கிய ஆன்மிக தலமாக மாறி உள்ளது.


இக்கோவில், தென்மாநிலங்களின் கட்டட கலையை பிரதிபலிக்கிறது. கோவிலின் நுழைவு வாயிலில், அழகாக செதுக்கப்பட்ட துாண்கள் உள்ளன. கருவறையில் சுயம்புவாக வீர கணபதி விக்ரஹம் உள்ளது. இக் கோவில் வளாகத்தில் பிரார்த்தனை மண்டபம் உள்ளது. இங்கு விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்படும். ஒவ்வொரு மாதமும் சங்கடஹர சதுர்த்திக்கு பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். விநாயகருக்கு தினமும் அபிஷேகம், அலங்காரம் செய்யப்படுகிறது. கூடுதலாக திருவிழா காலங்களில் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது. 

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
* பொறுமையாக இரு. அதை விட உயர்ந்த பண்பு வேறில்லை. * கடவுளின் பெயரைச் சொல். நல்லதே நடக்கும்.  * உலகம் ... மேலும்
 
temple news
ஓம் சந்தோஷி மாதா போற்றிஓம் சகலமும் அருள்வாய் போற்றிஓம் வேதங்கள் துதிப்பாய் போற்றிஓம் வெற்றிகள் ... மேலும்
 
temple news

மனிதன் தெய்வமாகலாம் செப்டம்பர் 24,2026

காஞ்சி மஹாபெரியவரிடம் ஒரு பக்தர், ‘‘சுவாமி... பூமியில் மனிதனாக பிறந்ததால் தானே இத்தனை துன்பம்? இனி ... மேலும்
 
temple news
* கடவுளின் திருவடியை பற்றிக்கொள். உன் பாவம் தீரும்.  * பிரகாரத்தை மெதுவாக வலம் வந்து சுவாமியை வணங்கு.  ... மேலும்
 
temple news
* உன்னிடம் என்ன உள்ளதோ அதைக் கொண்டு பிறருக்கு உதவி செய்.* தினமும் ஏதேனும் ஒரு நல்ல செயல் செய். மனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar