பதிவு செய்த நாள்
23
செப்
2020
12:09
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலுக்கு, 5 லட்சம்ரூபாய் மதிப்பிலான வெள்ளி திருவாசியை, சென்னையைச் சேர்ந்த பக்தர் ஒருவர் காணிக்கையாக வழங்கினார். திருத்தணி முருகன்கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர். இந்நிலையில், கடந்த மாதம், முருகன் மலைக்கோவிலில் உள்ள மூலவர்நுழைவு வாயிலுக்கு, சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான வெள்ளி கதவுகள் வழங்கினார்.
இந்நிலையில், சென்னை, அண்ணா நகரை சேர்ந்த தொழிலதிபர் எத்திராஜூலு என்பவர், மூலவர் சன்னிதியில் மூலவருக்கு வைக்கப்படும் திருவாசியை முழுதும் வெள்ளியால் செய்து தருவதாக கோவில் நிர்வாகத்திடம் உறுதி கூறினார்.இதையடுத்து, நேற்று, 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெள்ளி திருவாசியை தொழிலதிபர் மலைக்கோவிலுக்கு கொண்டு வந்தார்.பின், கோவில் தக்கார்ஜெய்சங்கர், மக்கள் தொடர்பு அலுவலர்கள்பழனி, அருணாச்சலம் ஆகியோரிடம் வெள்ளி திருவாசியை ஒப்படைத்தார்.திருவாசியை பெற்றுக்கொண்டு கோவில் நிர்வாகம், அவருக்கு பிரசாதங்கள் வழங்கியது. இது குறித்து கோவில் அதிகாரி ஒருவர் கூறுகையில், சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர் வெள்ளி திருவாசி செய்து கொடுத்துள்ளார். ஹிந்து அறநிலையத் துறை உயரதிகாரிகள் அனுமதி பெற்று, மூலவருக்கு வெள்ளி திருவாசி வைத்து பொருத்தப்படும் என்றார்.