பதிவு செய்த நாள்
24
செப்
2020
11:09
திண்டுக்கல்: திண்டுக்கல்லின் பெருமையை மலைக்கோட்டை சொல்லும். கூடுதலாக உலகுக்கு பறைசாற்றுவதாக உள்ளது நல்லமனார்கோட்டை அருகே உள்ள கல்வெட்டு.
பாண்டியர் ஆட்சியில் இருந்து வந்த திண்டுக்கல், விஜய நகர ஆட்சியில் ஏற்றம் பெற்றது. வெவ்வெறு ஆட்சிகளில் இவ்வூர் சிறந்த இராணுவத்தளமாக இருந்துள்ளது. நாயக்க மன்னர்கள், ஆற்காடு நவாப்புகள், மைசூர் மன்னர்கள், ஆங்கிலேயர் ஆகியோரால் பலப்படுத்தப்பட்டது. இக்கோட்டையினை கைப்பற்ற நடந்த போர்களை வரலாற்றில் அறியலாம். தற்போது திண்டுக்கல் சிறந்த போர்க்களமாகவும், ஆயுதம் தயாரித்து போரிடும் எல்லையாகவும் இருந்ததை கல்வெட்டுகள், நிலங்கள் வாயிலாக தெரிவிக்கிறது கரட்டுப்பட்டி(பெரும்புள்ளி) எனும் குக்கிராமம்.கரட்டுப்பட்டி எனும் பெரும்புள்ளிதிண்டுக்கல்லில் இருந்து 17 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது நல்லமனார் கோட்டை.
அதனையடுத்த தொட்டணம்பட்டியில் இருந்து 2 கி.மீ., தொலைவில் மலை கரடுகளுக்கு இடையில் அமைந்துள்ளது கன்னிமார் கோயில். இதனை சுற்றியுள்ள பகுதி முன்பு பெரும்புள்ளி (தற்போது கரட்டுப்பட்டி) என அழைத்துள்ளனர். இக்கோயிலை ஒட்டி பாறைகள் உடைக்கப்பட்ட இடத்தில் உள்ளது கல்வெட்டு. இந்த மலைக் கரட்டின் உச்சியில் நின்று பார்த்தால் திண்டுக்கல் மலைக்கோட்டை முழுமையாக தெரிகிறது.9ம் நூற்றாண்டைச் சேர்ந்ததுபாண்டிய நாட்டில் முற்கால மன்னனான இரண்டாம் வரகுணனின் 9ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக கூறப்படுகிறது. இங்குள்ள கல்வெட்டு பாண்டியர்கள் கீழ் பணிபுரிந்த ஒரே குடும்பத்தின் நான்கு தலைமுறைகளை குறிப்பிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி வேளான், பராந்தக பள்ளி வேளான், குறும்பாதித்தன் நக்கன் புள்ளன், புள்ளன் நக்கன் ஆகியோரின் பெயர்களையும், அவர்கள் செய்த தானங்களையும் தெரிவிக்கிறது. அதேபோல், ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபன், இரண்டாம் வரகுணன் ஆகியோரின் பெயர்களும் இடம் பெற்றுள்ளது.இராணுவத் தளம்பாண்டியர் ஆட்சி காலத்தில் இது இராணுவ தளமாகவும், ஆயுதம் தயாரிக்கும் இடமாகவும் இருந்திருக்கலாம். இங்குள்ள நிலங்களில் இரும்பு தயாரிக்கும் போது பயன்படுத்தப்படும் கற்கள் இன்றளவும் காணப்படுகிறது. மாதம் அல்லது ஆண்டுக்கணக்கில் நடைபெறும் போருக்குத் தேவையான ஆயுதங்கள், உணவுகளை எல்லைப் பகுதியில் இருந்தே தயாரிப்பதற்கான சான்றுகள் உள்ளன.நான்கு பேர் சுற்றும் உரல்இங்குள்ள மண்பாண்டங்கள் பல்வேறு வடிவங்களில் வயல்வெளிகளில் காணக் கிடைக்கின்றன. தற்காலத்தில் இதுபோன்ற மண்பாண்டங்களைப் பார்க்கவே வாய்ப்பில்லை. அதன் வடிவங்கள், அமைப்புகள் உணவு தயாரிப்பிற்கும், தானியங்கள் சேமித்து வைப்பதற்கும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.உரல் 4 பேர் சேர்ந்து சுற்றக்கூடிய மிகப்பெரிய உரலைப் இப்பகுதியில் காணலாம். இது அப்பகுதியில் அக்காலத்தில் கூட்டாக வாழ்ந்ததற்கான அடையாளமாக உள்ளது.இங்கு எலும்புகள் பலவற்றையும் காண முடிகிறது. அவை எந்தவித விலங்கினங்களையோ அல்லது மனிதர்களின் எலும்பாகவோ தெரியவில்லை. இந்த எலும்புகள் முற்றிலும் மாறுபட்டுள்ளதாக அப்பகுதி மக்களும் ஏற்கனவே ஆய்வு செய்தோரும் தெரிவிக்கின்றனர்.100 வருடங்களுக்கு மேலாக விவசாயம் செய்யும் இடம் இது. ஒவ்வொரு முறையும் உழவு செய்யும்போதெல்லாம் புதிதுபுதிதாக மண்பாண்டங்களும், எலும்புகளும் வெளியே வந்த வண்ணம் உள்ளது.இங்குள்ள கல்வெட்டுகள் அருகே பல கற்கள் உடைபட்டு காணப்படுகின்றன. அதில் பல தகவல்கள் பொறிக்கப்பட்டிருக்கலாம் அல்லது வேறே ஏதேனும் காரணத்திற்காக உடைக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.பாண்டிய நாட்டின் எல்லைஇக்கல்வெட்டு அமைந்துள்ள பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகள் பாண்டிய நாட்டின் எல்லைப்பகுதியாக இருக்கலாம் என கூறப்படுகிறது. அதற்கேற்றாற்போல் அங்குள்ள மலைக்கரடும் திண்டுக்கல் மலைக்கோட்டையும் அமைந்துள்ளது. போர் காலங்களில் இக்கரடின் மீது ஏறி சைகை மூலமாக மலைக்கோட்டைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கலாம்.
இங்குள்ள குகை சரியாக 21 கி.மீ., தொலைவில் அமைந்துள்ள மலைக்கோட்டையை சென்றடைகிறது என்றும் கூறப்படுகிறது.இக்கல்வெட்டினை 10 வருடங்களுக்கு முன்பு மற்றும் 6 வருடங்களுக்கு முன்பாக தொல்லியல் ஆய்வாளர்கள் ஆய்வு செய்து குறிப்பெடுத்துச் சென்றிருக்கின்றனர்.மதுரை தொல்லியல்துறை துணை இயக்குநர் சக்திவேலிடம் கேட்டபோது, தொல்லியல் ஆய்வுகள் நடந்திருக்க வாய்ப்புகள் உள்ளன. திண்டுக்கல் தொல்லியல் பதிவேடுகளை ஆய்வு செய்த பின்பே முழுமையாக எதையும் கூற முடியும் என்றார்.தொல்லியல் துறை கரட்டுப் பட்டி எனும் இந்த பெரும்புள்ளியை ஆய்வு செய்தால் மீண்டும் தமிழகத்தில் ஒரு கீழடி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.இது புண்ணிய பூமிபொன்னுச்சாமி : இந்த இடத்தைச் சுற்றி கோட்டைச் சுவர்கள் இருந்துள்ளதாக முன்னோர்கள் தெரிவித்தனர். இப்போதும் உழவின் போது கல்வெட்டுகள், சிலைகள் போன்றவைகள் தட்டுப்படுகின்றன. இந்த பூமியை நாங்கள் புண்ணிய பூமியாக வணங்குகின்றோம். அருமை தெரியவில்லைஆண்டிச்சாமி: எனக்கு விவரம் தெரிந்த நாள் முதல் விவசாயம் செய்கிறேன். நிறைய கல்வெட்டுகள் எங்களுக்கு கிடைத்தது. அதன் அருமை தெரியாமல் அதை கண்டு கொள்ளவில்லை அவற்றை ஆய்வு செய்தால் பாண்டியர்கள், நாயக்கர்கள் பெருமை தெரியவரும்.மன்னர்கள் வாழ்ந்த பூமிபிச்சைமுத்து : முற்காலத்தில் இங்கு மன்னர்கள் வாழ்ந்ததாக எங்களின் முன்னோர் கதையாக தெரிவித்துள்ளனர். அதற்கு ஆதாரமான உரல், மண்பாண்டங்கள், கல்வெட்டுகள் இங்கு கிடக்கிறது. இங்குள்ள கரடில் ஊற்று ஒன்று உள்ளது. சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பதினெட்டுப்பட்டி கிராம மக்களும் தங்கள் கோயில் குடமுழுக்கிற்கு இங்கிருந்துதான் தண்ணீர் எடுத்துச் செல்கின்றனர், என்றார்.