கஜேந்திர வரதராஜபெருமாள் கோவிலில் பிரமோற்சவம் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24செப் 2020 11:09
கடலுார்: கடலுார் புதுக்குப்பம் கஜேந்திர வரதராஜபெருமாள் கோவில் பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. கடலுார் புதுக்குப்பம் ராதாகிருஷ்ணன் நகரில் ஸ்ரீதேவி பூதேவி சமேத கஜேந்திர வரதராஜபெருமாள் கோவில் பிரமோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நேற்று முன்தினம் பெருமாள் தாயார் திருமஞ்சனம், பூஜைகள் நடந்தது. நேற்று காலை 9:00 மணியளவில் கொடியேற்றி விழா துவங்கியது. அதனை தொடர்ந்து யாகசாலை ஹோமம் மற்றும் திருமஞ்சனம் நடந்தது. மாலை சாமிக்கு சிறப்பு அலங்காரம் நடந்தது. தொடர்ந்து 29ம் தேதி வரை விழா நடக்கிறது. அன்றைய தினம் 1008 சகஸ்ரநாம அர்ச்சனையும், ஊஞ்சல் சேவையும் நடக்கிறது.