ஓமலூர்: லட்சுமி நரசிம்மர் கோவிலில், ஒரு கோடி ரூபாயில், திருப்பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. நங்கவள்ளியில், பழமையான லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அந்த கோவிலில், உபயதாரர், மக்கள் பங்களிப்புடன், 2018 செப்., 17ல், ஒரு கோடி ரூபாய் மதிப்பில், திருக்கோவில் பணி தொடங்கியது.
அதில், ராஜகோபுரம், மூலஸ்தன கோபுரம், மேற்கு கோபுரம், சபா மண்டபம், விஸ்வசேனர் சன்னதி, வரவேற்பு வளைவு, கோவில் உட்பிரகாரத்தில், பல்வேறு புனரமைப்பு பணி நடந்து வருகிறது. தற்போது, ராஜகோபும், மூலஸ்தன கோபுரங்களில், சுவாமி சிலைகள் பொருத்தப்பட்டு பணி முடிந்து வண்ணம் தீட்டும் பணி தொடங்கியுள்ளது. மேலும், கோவில் உட்பிரகாரத்தில், தரையில் கல் பதித்தல், மடப்பள்ளி, அன்னதானம் மண்டபம் சீரமைத்தல், புது அலுவலக கட்டடம், மின் அறை ஆகியவற்றுக்கு பணி மேற்கொள்ள அனுமதி கோரப்பட்டுள்ளது. தற்போது பக்தர்கள், நோய் தடுப்பு நடவடிக்கைக்குட்பட்டு, அதற்கென அமைக்கப்பட்ட வழியில், தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.