ராமேஸ்வரம்: தனுஷ்கோடி அருகே கோதண்டராமர் கோயிலை சுற்றி வளர்ந்துள்ள முள்மரங்களால், கோயில் சுவர் விரிசல் ஏற்படும் நிலை உள்ளது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உபகோயிலான கோதண்டராமர் கோயில், ராமாயண வரலாற்றில் தொடர்புடையது. தனுஷ்கோடி செல்லும் சாலை அருகில் அமைந் துள்ள இக்கோயிலில் ஏராளமான பக்தர்கள் , சுற்றுலா பயணிகள் தரிசனம் செய்கின்றனர். பிரசித்தி பெற்ற இக்கோயிலை சுற்றியும், சாலை ஒரத்திலும் அடர்ந்து வளர்ந்துள்ள ஏராளமான கருவேல மரங்கள் , கோயில் அழகிய தோற்றத்தை மறைத்தும், இதன் வேர்கள் கோயில் சுவரை பதம்பார்க்கும் நிலை உள்ளது. எனவே கோயிலை சுற்றியுள்ள முள்மரங்களை அகற்றி, கோயிலின் எழில்மிகு தோற்றத்தை பக்தர்கள் கண்டு தரிசிக்க இந்து அறநிலையத்துறை , மாநில நெடுஞ்சாலை துறை முன்வர வேண்டும்.