மாங்கோட்டு பகவதி அம்மன் கோவிலில் 250 பேருக்கு மட்டுமே அனுமதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09அக் 2020 10:10
பாலக்காடு: கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஆலத்தூர் அருகே உள்ளது புகழ்பெற்ற அத்திப்பொறறை மாங்கோட்டு பகவதி அம்மன் கோவில். கொரோனா அச்சுறுத்தல் உள்ள இந்த நிலையிலும் தமிழகத்திலிருது வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. இதனால் பக்தர்கள் பலருக்கு அம்மனை தரிசித்து வழிபாடு நடத்த முடியாமல் வருகின்றனர். இச்சூழ்நிலையில் அரசின் கொரோனா தொற்று பரவல் தடுப்பு வழிகாட்டு முறைகளின்படி முன்கூட்டி பதிவு செய்யும் 250 பேருக்கு மட்டுமே அம்மன் தரிசனத்திற்கு அனுமதி உள்ளன என்று கோவில் நிர்வாகம் தீர்மானித்துள்ளன. முன்கூட்டி பதிவு செய்ய கீழ்காணும் கைபேசி எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும். போன்: 8590805996.