பெத்தநாடார்பட்டி பெரிய அம்மன் கோவில் கொடை விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08அக் 2020 04:10
தென்காசி : பாவூர்சத்திரம் அருகேயுள்ள பெத்த நாடார் பட்டி பெரியஅம்மன் கோவில் கொடை விழா 4 நாட்கள் கோலாகலமாக நடைபெற்றது.
விழாவின் முதல் நாளான 4ம்தேதி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரண்டாம் நாளன்று மாலை 6 மணிக்கு குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள், குழந்தைகள் கலந்து கொண்டு அம்மன் போற்று பாடினார்கள். தொடர்ந்து அன்றையதினம் இரவில் அம்மன் சப்பரம் வீதி உலா வந்தது. மூன்றாம் நாள் மாலையில் குற்றாலத்தில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டது. மேளத்தாளம் முழங்க சாமியாட்டம் நடைபெற்றது. இரவு 10 மணிக்கு பொங்கலிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையடுத்து நள்ளிரவு 12 மணிக்கு சாம பூஜை, கிடா வெட்டுதல், தொடர்ந்து மாவிளக்கு எடுத்து வரப்பட்டது. ஊர் பொதுமக்கள் உற்சாகத்துடன் அம்மனுக்கு மாவிளக்கு எடுத்து வந்து படைத்தனர்.
கடைசி நாளான 7ம்தேதி மதியம் கிடா வெட்டுதல் மற்றும் உச்சிகால பூஜை நடைபெற்றது. மாதவி வில்லிசைக் குழுவின் சிறப்பான வில்லிசை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் முளைப்பாரி மற்றும் ஒடுக்கு பானை எடுத்து வந்தனர். சிறப்பு பூஜைகளுடன் வில்லிசை மற்றும் மேளதாள இசையுடன் விழா நிறைவு பெற்றது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.