பக்தர்கள் உபயத்துடன் சேவுகப்பெருமாள் கோயில் திருப்பணி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13அக் 2020 11:10
சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் சிவகங்கை சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் கும்பாபிஷேக திருப்பணி துவங்கியுள்ளது. 400 ஆண்டு பழமை வாய்ந்த இக்கோயில் சைவமும் வைணவமும் சங்கமிக்கும் விதமாக உள்ளது. இங்கு மூலவராக பூரணை புட்கலை தேவியருடன் சேவுகப்பெருமாள்அய்யனார் அருள்பாலிக்கிறார். பிடாரி அம்மன், சுயம்புஈஸ்வரர், அடைக்கலம் காத்த அய்யனார், விநாயகர், சுப்ரமணியர் மற்றும் நவக்கிரகங்களுக்கு தனியாக சன்னதிகள் உள்ளன. வைகாசியில் இக்கோயிலின் திருவிழா நடைபெறும். இக் கோயில் கும்பாபிஷேகம் 2001ல் நடந்ததை தொடர் ந்து தற்போது மீண்டும் நடத்த பக்தர்கள் விருப்பம் தெரிவித்தனர். இதை தொடர்ந்து பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் துவங்கியுள்ளது. கும்பாபிஷேக பணிகள் அனைத்தும் உபயதார்களின் பங்களிப்புடன் நடக்கவுள்ளது. புதிதாக கோயிலை சுற்றி நடைபாதை அமைக்கப்பட உள்ளது.
ரா ம.அருணகிரி, திருப்பணிக்குழுத்தலைவர் : 19 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கும்பாபிஷேகம் நடக்கவுள்ளது. கோயிலின் தொன்மை மாறாமல் புதுப்பிக்க உள்ளோம். திருப்பணி முழுக்க பக்தர்கள்மற்றும் உபயதாரர்களின் பங்களிப்புடன் நடக்க உள்ளது. வரும் வைகாசி திரு விழாவுக்கு முன்பாக கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது, என்றார்.