Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மருந்தீஸ்வரரை மனமுருக வேண்டி ... நாகம்மாள் கோவிலில் பொங்கல் வைபவம் நாகம்மாள் கோவிலில் பொங்கல் வைபவம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரூ.5 கோடி கோவில் நிலம் திருக்கழுக்குன்றத்தில் மீட்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 அக்
2020
02:10

 திருக்கழுக்குன்றம்; திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான, 5 கோடி ரூபாய் மதிப்பு நிலம், நேற்று மீட்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில், புகழ்பெற்ற வேதகிரீஸ்வரர் கோவில் உள்ளது.இதன் வடக்கு கோபுர வீதியில், கோவிலுக்கு சொந்தமாக, சர்வே எண்.557/25ல், 92 சென்ட் இடம் உள்ளது. இதில், 18 சென்ட், வாகன மண்டபம்.இந்த மண்டபம், 1904ல், அலமேலு அம்மாள் என்பவருக்கு, 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டது. 2003ம் ஆண்டு, குத்தகை முடிந்தது.குத்தகை காலம் முடிந்ததால், மண்டப இடத்தை ஒப்படைக்க வேண்டும் என, கோவில் நிர்வாகம் கூறியதை, அலமேலுவின் வாரிசுதாரர்கள் மறுத்தனர்.இதையடுத்து, 2008ல், வேலுார் இணை ஆணையர் நீதிமன்றத்தில், வழக்கு தொடரப்பட்டது. விசாரித்த நீதிமன்றம், கோவில் இடத்தை ஒப்படைக்க வேண்டும் என, வாரிசுதாரர்களுக்கு உத்தரவிடப்பட்டது. இத்தீர்ப்பை எதிர்த்து, 2013ல், வாரிசுதாரர்களான விநாயகசுந்தரம், சம்மந்தம் ஆகியோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதிலும், இடம் கோவிலுக்கே சொந்தமானது என, பிப்ரவரி, 19ம் தேதி, நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், கோவில் நிர்வாகம், 18 சென்ட் வாகன மண்டப இடத்தை, நேற்று மீட்டு, கோவில் நிலம் என, அறிவிப்பு பலகையும் வைத்தது. இதன் மதிப்பு, 5 கோடி ரூபாய் என, அதிகாரிகள் கூறினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி;  அனந்த பத்மநாப விரதத்தையொட்டி, இன்று வெள்ளிக்கிழமை காலை திருமலையில் உள்ள சுவாமி ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை மணிமண்டபத்தில் உலக நலன் மற்றும் ஆன்மிக செழிப்பு வேண்டி, ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: இலங்கை தலைமன்னாரில் இருந்து கடலில் உள்ள ராமர் பாலத்தை சுற்றுலா படகில் கண்டு தரிசிக்க ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், வளர்பிறை சதுர்த்தசி திதியையொட்டி நடராஜருக்கு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: புகழ் பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு, 23 ஆண்டுகளுக்குப் பிறகு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar