சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று பெரிய புராணத் தொடர் சொற்பொழிவு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24மே 2012 11:05
சிதம்பரம் : சிதம்பரத்தில் பெரியபுராணத் தொடர் சொற்பொழிவு இன்று துவங்கி ஒன்பது நாட்கள் நடக்கிறது.சிதம்பரம் நடராஜர் கோவிலில் பெரியபுராண தொடர் சொற்பொழிவு இன்று துவங்கி வரும் ஜூன் 1ம் தேதி வரை நடக்கிசொற்பொழிவு மாலை 6.30 மணி முதல் 8.30 வரை நடக்கிறது. வெங்கடேச தீட்சிதர் தலைமை தாங்குகிறார். சொற்பொழிவை திருப்பனந்தாள் காசிமடத்து அதிபர் முத்துக்குமார சுவாமி தம்பிரான் சுவாமிகள் அருளாசி வழங்கி துவக்கி வைக்கிறார்.நிகழ்ச்சியில் அடியவர் என்ற தலைப்பில் கலியபெருமாள், அநபாயன் தலைப்பில் வேணுகோபாலன், பூங்கோயில் தலைப்பில் நாராயணமூர்த்தி, திருவாரூர், திருச்செவி, புகழ்ந்து, துணையுடன், சிவலோகம், சங்கரன் போன்ற தலைப்புகளில் பெரியபுராண தொடர் சொற்பொழிவு நடக்கிறது.விழா ஏற்பாடுகளை காசிமடத்தின் மேலாளர் பொன்னம்பலம் செய்து வருகிறார்.