காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் இருந்து 25 கி.மீ., துாரத்தில் கண்டேர்பல் என்ற இடம் உள்ளது. இங்கிருந்து சிறிது துாரத்தில் துாலாமுலா என்ற ஊர் உள்ளது. இங்கு நான்கு பக்கமும் தண்ணீரால் சூழப்பட்ட சிறு தீவைக் காணலாம். இங்குள்ள மணல் மேட்டில் ‘பாதம்’ போன்ற அமைப்பில் குளம் இருக்கிறது. சலவைக் கற்களால் கட்டப்பட்ட குளத்தின் நடுவில் க்ஷீர பவானி அம்மனும், சிவனும் காட்சி தருகின்றனர். இந்த குளத்து நீருக்கு பக்தர்கள் பூஜை செய்கின்றனர். ‘க்ஷீரம்’ என்றால் ‘பால்’. புராண காலத்தில் இந்த குளம் பால் போல் வெண்மையாக இருந்ததால் இப்பெயர் வந்தது. சுவாமி விவேகானந்தர் அடிக்கடி இங்கு வழிபாடு செய்துள்ளார்.