ராஜபாளையம் : விஜய தசமியை முன்னிட்டு கோயில்களில் குழந்தைகளுக்கான ஏடு துவங்கும் நிகழ்ச்சி நடந்தது. அதிகாலை 6:00 மணி முதல் சொக்கர் கோயில் , 9:00 மணிக்கு கோதண்டராம சுவாமி கோயிலில் குழந்தைகளுக்கானகல்வி பயிலும் அக்சர அப்யாஸ்எனும் ஏடு துவங்கும்நிகழ்ச்சி நடந்தது.சொக்கர் கோயிலில் சரஸ்வதி தேவி சிலைக்கு சிறப்பு பூஜையுடன் சரஸ்வதிஸ்லோகங்களை கூற அர்ச்சனை நடந்தது. கோதண்ட ராம சுவாமி கோயிலில் ஏடு துவக்க விழா நிகழ்ச்சிபோது குழந்தைகளுக்குதிலகமிட்டு குழந்தைகளின் நாவில் தேன்தடவி பச்சரிசியில் ஓம், அ என எழுத்துக்களைஎழுத வைத்தனர். கொரோனாவால் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் கோயிலில் நுாற்றுக்கு அதிகமான குழுந்தைகள் பாரம்பரிய உடை அணிந்து பங்கேற்றனர்.