ஜோசப்பும், பிரான்சிசும் நண்பர்கள். ராணுவத்தில் பணிபுரிந்த அவர்கள் எதிரிநாட்டினரை பிடிக்க அனுப்பப்பட்டனர். பிரான்சிஸ் ஓரிடத்தில் கால் வைத்த போது கண்ணி வெடி வெடித்தது. துாக்கி வீசப்பட்ட அவர் ஒரு காலையும், ஒரு கையையும் இழந்தார். ஒற்றைக் கையை ஊன்றி ஊர்ந்தபடியே கழிவறைக்கு செல்வார். மருத்துவமனையில் பட்டபாடு சொல்லி மாளாது. நண்பருடன் ஊர் திரும்ப போவதாக பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். ஆனால் ஜோசப் அதை விரும்பவில்லை. பொதுவாக அழகாக இருப்பவர்களுடன் மட்டுமே நட்பு நாம் பாராட்டுகிறோம். இதை விட்டு ஆபத்து நேரத்தில் நண்பர்களுக்கு உதவ வேண்டும். மற்றவர்களுக்கு செய்யும் நன்மை தேவனுக்கு செய்தது போலாகும் என்கிறார் இயேசு.