பண்ணையார் ஒருவர் வியாபாரிக்கு கடன் கொடுத்து உதவினார். ஆனால் நீண்ட நாளாகியும் கடனைச் செலுத்தவில்லை. ஒருநாள் வியாபாரியை வரவழைத்து, பணம் தராவிட்டால் தண்டிக்கப் போவதாக தெரிவித்தார். வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை சொல்லி தள்ளுபடி செய்ய மன்றாடினார் வியாபாரி. இரக்கப்பட்ட பண்ணையாரும் விட்டுக் கொடுத்தார். இந்நிலையில் வீட்டுக்கு சென்ற வியாபாரி தன்னிடம் சொற்ப தொகை கடன்பட்டிருந்த வேலைக்காரனைக் கூப்பிட்டார். ‘‘இப்போதே உன் கடனைத் தீர்க்க வேண்டும் இல்லாவிட்டால் தண்டிப்பேன்’’ என நிர்பந்தம் செய்தார். காலில் விழுந்த வேலைக்காரன் செய்வதறியாமல் திகைத்தான். இந்த விஷயம் பண்ணையாரின் காதிற்கு வந்தது. வியாபாரியை மீண்டும் கூப்பிட்டு, ‘என்னைப் போல நீயும் இரக்கம் காட்ட வேண்டாமா?’ எனக் கேட்ட பண்ணையார் கடனை வசூலிக்கும் முடிவுக்கு வந்தார். தன்னைப் போல பிறரையும் நேசிப்பவனே நல்ல மனிதன்.