பதிவு செய்த நாள்
01
நவ
2020
11:11
திருக்கழுக்குன்றம் : திருக்கழுக்குன்றம் சொக்கம்மன் கோவிலில், வருஷாபிஷேக விழா, நேற்று கோலாகலமாக நடந்தது.
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலின் உபகோவில்களில் ஒன்றாக, திருமலை சொக்கம்மன் கோவில், கிரிவலப்பாதையில் உள்ளது. பவுர்ணமி, பிரதோஷ நாட்களில் கிரிவலம் வருவோர், மலை மீது அமைந்துள்ள இக்கோவிலில் வழிபட்டு செல்வர்.ஆறு ஆண்டுகளுக்கு முன், இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. இதன் நிறைவை ஒட்டி, வருஷாபிஷேக விழா, நேற்று கோலாகலமாக நடந்தது.மூலவர் சொக்கம்மனுக்கு அபிஷேகம், தீப துாப ஆராதனை, மலர் அர்ச்சனை நடந்தது. பட்டுப்புடவையில் அம்மன் அருள்பாலித்தார். அதைத் தொடர்ந்து மாலை, 4:30 மணிக்கு, உற்சவர் சொக்கம்மன், அன்னபூரணி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை தரிசித்தனர். விழா ஏற்பாடுகளை, கோவில் அர்ச்சகர் ராஜேந்திரன் செய்தார்.