திருமங்கலம் : திருமங்கலம் அருகே ஏ.அம்மாபட்டி சடச்சியம்மன் கோயில் திருவிழாவில் நேர்த்திக்கடனாக வழங்கப்பட்ட 84 ஆடுகள், 80 கோழிகள் பலியிடப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக பிரியாணி வழங்கப்பட்டது. இக்கோயிலில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பொங்கல் விழா நடக்கும். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் நேர்த்திக்கடனாக ஆடு, கோழிகள் வழங்குவர். இவை திருவிழாவின் போது வெட்டப்பட்டு பிரியாணி தயார் செய்யப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படும். இந்தாண்டு நேற்று முன்தினம் இரவு அம்மனுக்கு சிறப்பு அபிேஷகத்துடன் துவங்கிய திருவிழா நேற்று காலை நிறைவுற்றது. அம்மனுக்கு படைக்கப்பட்ட பிரியாணி பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.