பதிவு செய்த நாள்
03
நவ
2020
06:11
வீரபாண்டி: முருகனுக்கு உகந்த கார்த்திகை நட்சத்திர தினமான நேற்று, கந்தசாமியை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர். சேலம்-நாமக்கல் மாவட்ட எல்லையில் உள்ள, காளிப்பட்டி கந்தசாமி கோவில், அறுபடை வீடுகளுக்கு அடுத்தபடியாக, அதிக பக்தர்கள் தரிசனம் செய்யும் முருகன் கோவிலாகும். கார்த்திகை நட்சத்திரத்தையொட்டி, நேற்று காளிப்பட்டி கந்தசாமி மூலவருக்கு சிறப்பு அபி?ஷகம் செய்து, ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதே போல் வள்ளி, தெய்வானை சமேத கந்தசாமி உற்சவருக்கும் அபி?ஷகம் செய்து, பல வண்ண மலர் மாலைகள், வெள்ளி கவசத்தில் கந்தசாமி எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார். ஆட்டையாம்பட்டி, வேலநத்தம் பாவடி முத்துக்குமாரசுவாமி கோவில், உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் ஆகியோருக்கும் கார்த்திகை நட்சத்திரத்தையொட்டி, சிறப்பு அபி?ஷக பூஜை செய்யப்பட்டது.