Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தியாகராஜர் கோவில் குளத்தில் தண்ணீர் ... தேவபாண்டலத்தில் மகா சண்டி ஹோமம் தேவபாண்டலத்தில் மகா சண்டி ஹோமம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கமலா ஹாரிஸ் வெற்றி பெற பூர்வீக கோவிலில் வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கமலா ஹாரிஸ் வெற்றி பெற பூர்வீக கோவிலில் வழிபாடு

பதிவு செய்த நாள்

04 நவ
2020
12:11

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே, துளசேந்திரபுரம் கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர், அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ். இவரது தாத்தா, பி.வி. கோபாலன், துளசேந்திரபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது மூத்த மகள் சியாமளாவின் மகள் தான், கமலா ஹாரிஸ்.இக்கிராமத்தில் உள்ள, தர்மசாஸ்தா கோவில், கமலா ஹாரிஸ் குடும்பத்தினரின் குல தெய்வ கோவில். இக்கோவிலில், அய்யனார் மூலவராக அருள்பாலிக்கிறார். நேற்று, அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்தது. துணை அதிபர் பதவிக்கு, கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். இவர், தேர்தலில் வெற்றி பெற, தர்ம சாஸ்தா கோவிலில், கிராம மக்கள் சார்பில், நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.கமலா ஹாரிஸ், தனக்கு பிடித்த உணவு எனக் கூறிய, இட்லி, வடை பிரசாதமாக வழங்கப்பட்டது. மேலும், ஊர் முழுதும், கமலாவை வாழ்த்தி, பேனர்களும் வைக்கப்பட்டிருந்தன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில், ஐப்பசி மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே உள்ள ... மேலும்
 
temple news
சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் பிரசாதம் தயாரித்து வழங்கும் திட்டத்தை, ஹிந்து ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம்: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதப் பெருமாள் கோயிலில் முக்கிய ... மேலும்
 
temple news
மதுரை: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் தைலக்காப்பு உற்ஸவத்தை முன்னிட்டு மலைமீதுள்ள நுாபுர கங்கை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா திருவாவடுதுறையில் கோமதீஸ்வரர் கோவில் உள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar