விஸ்வரூப தரிசனத்தில் பெருமாள்: மலைப்பட்டியில் மலைக்க வைக்கும் அற்புதம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07நவ 2020 10:11
விருதுநகர்: விருதுநகர் அருகே மலைப்பட்டியில் ஒரே கல்லில் தத்ரூபமாக செதுக்கப்பட்ட ஸ்ரீவிஸ்வரூப பள்ளி கொண்ட பெருமாள் கோயில் பழமையும், புராதான சிறப்பும் பெற்றது. பெருமாள் சுவாமியை வணங்குவோருக்கு கேட்ட வரம், திருமண தடை, குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது பக்தர்களிடையே தொன்று தொட்டு நிலவும் நம்பிக்கை.ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லானியில் பெருமாளுக்கு கோயில் எழுப்ப விருதுநகர் அருகே மலைப்பட்டி மலையில் கருங்கல் தேர்வு செய்யப்பட்டது. பெருமாள் விஸ்வரூபத்தில் வீற்றிருப்பது போல் அழகிய தோற்றத்துடன் சிலையை ஸ்தபதிகள் கலைநுட்பத்துடன் தத்ரூபமாக வடிவமைத்தனர். எனினும் அதிக எடையுடன் கூடிய சிலையை திருப்புல்லானி கொண்டு செல்ல இயலவில்லை. சிலையை பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பி ஸ்ரீவிஸ்வரூப பள்ளி கொண்ட பெருமாள் என பெயரிட்டு வழிபட்டு வருகின்றனர். தட்சிணாமூர்த்தி, தன்வந்திரி, ஹயக்கிரீவர், மகாலட்சுமி, கருடாழ்வார், ஆஞ்சனேயருக்கு தனித்தனி சன்னதிகள் உண்டு. அழகான நந்தவனம் அமைத்து பூக்களை பூஜைக்கு பயன்படுத்தி வருகின்றனர். கேட்ட வரம் தருவார் பெருமாள் சுவாமி என்ற நம்பிக்கை நிலவுகிறது.