செஞ்சி; செஞ்சி சிறுகடம்பூர் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் கோவிலில் மழை வேண்டி வேல் பூஜை நடந்தது.
செஞ்சி பகுதியில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை சரிவர பெய்யாததால் ஏரி குளங்களில் தண்ணீர் வற்றி உள்ளது. இதுவரை வடகிழக்கு பருவமழையும் பொழிய வில்லை. மழை இல்லாமல் பல இடங்களில் சம்பா நடவு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. நடவு செய்த நிலங்கள் பல வற்றில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.இதற்காக செஞ்சி சிறுகடம்பூர் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் கோவிலில் மழை வேண்டி வேல் பூஜை நடந்தது.இதை முன்னிட்டு காலையில் திருமுருகன் சுவாமி தலைமையில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு அபிஷேக அலங்காரம் செய்தனர். தொடர்ந்து சக்தி வேலுக்குவிசேஷ அபிஷேகம் செய்து வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.