நத்தம் : நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இந்த ஆண்டு நடைபெறும் கந்த சஷ்டி விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கந்த சஷ்டியையொட்டி திரளான பக்தர்கள் இக்கோயிலுக்கு காப்பு கட்டி விரதம் இருப்பர். விழாவில் கொடியேற்றத்திற்கு பின், சிவ பூஜை, சிவ உபதேசம், நடனக்காட்சி அருளல், வேல் வாங்குதல் நிகழ்ச்சிகள் நடைபெறும். முக்கிய நிகழ்வாக இருப்பது 6ம் நாளில் நடக்கும் சூரசம்ஹாரம். இந்த ஆண்டு விழா நவ.15 முதல் நவ.21 வரை விழா நடக்க உள்ளது. தற்போது கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் அபிேஷகம், சிறப்பு பூஜைகள் கோயிலுக்குள்ளேயே நடைபெறும். இதில் பக்தர்களுக்கு அனுமதியில்லை. வழக்கமான தரிசனத்திற்கு அரசின் வழிகாட்டுதல்படி பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என, கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.