திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் தலைமை குருநாதர் கைலாசநாதர் தலைமையில் நிர்வாகிகள்ஆலோசனை கூட்டம் நடந்தது. குருசாமி வேலப்பன் முன்னிலை வகித்தார். நிர்வாகி ராமசுப்பு வரவேற்றார். கேரளா ஐயப்பன் கோயிலுக்கு செல்ல இயலாத பக்தர்கள்கொண்டுவரும் நெய் மூலம் ஐயப்பசுவாமிக்கு அபிஷேகம் செய்யவும், அவர்களுக்கு அன்னதானம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டது. டிச.,26 மண்டலாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.