பதிவு செய்த நாள்
11
டிச
2020
04:12
கன்னிவாடி: பழநி பாதயாத்திரை பக்தர்களின் வருகை துவங்கியுள்ள நிலையில், வழித்தட கிராமங்களில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை.
பழநி கோயில் தைப்பூச விழாவின் பாதயாத்திரை பயணம், ஆண்டுதோறும் மார்கழி முதல் துவங்குவது வழக்கம். தேனி, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட வெளிமாவட்ட பக்தர்களும், மெட்டூர், -பலக்கனுாத்து ரோடு வழியே பாதயாத்திரை செல்வர்.தைப்பூச விழா முடிந்த பின்பும் பங்குனி உத்திரம் வரை பக்தர்களின் வருகை இருக்கும். பகலில் ஓய்வெடுத்து நள்ளிரவு துவங்கி அதிகாலை வரை பக்தர்கள் நடந்து செல்வர். கொடைரோடு, செம்பட்டி, கன்னிவாடி பகுதிகளில் சில நாட்களாக சாரலும், இடையிடையே பகலில் வெயிலும் உள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளால் தரிசனம், முன்பதிவு போன்ற விதிகள் இந்தாண்டு நடைமுறையில் உள்ளன.இருப்பினும், முன்னதாகவே பாதயாத்திரை பக்தர்களின் வருகை துவங்கியுள்ளது. தினமும் சிலர் யாத்திரையை மேற்கொண்டு வருகின்றனர். பக்தர்களுக்கான அடிப்படை வசதி ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் துவங்கவில்லை. கன்னிவாடி, தருமத்துப்பட்டியில் பாதயாத்திரை பக்தர்கள் தங்கும் மண்டபங்கள் உள்ளன. இப்போதே பராமரித்து தண்ணீர், கழிவறை, பாதுகாப்பு ஏற்பாடுகளை மேம்படுத்த கோயில் நிர்வாகம் முன்வர வேண்டும்.