Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரிஷபம் : சௌபாக்கியம் தரும் சனி கடகம் : சுறுசுறுப்பு அவசியம் கடகம் : சுறுசுறுப்பு அவசியம்
முதல் பக்கம் » சனிப்பெயர்ச்சி பலன்! (27.12.2020 முதல் 20.12.2023 வரை)
மிதுனம் : பொறுத்தார் பூமியாள்வார்
எழுத்தின் அளவு:
மிதுனம் :  பொறுத்தார் பூமியாள்வார்

பதிவு செய்த நாள்

12 டிச
2020
16:43

மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள் : பொது : ‘கண்டச் சனி’ எனும் நிலையிலிருந்து வெளியேறி ‘அஷ்டமத்துச் சனி’ எனும் நிலையினை சந்திக்க உள்ளீர்கள். எட்டாம் இடத்தில் சனி வரும் காலத்தே சகல விதமான கஷ்டங்களையும் தருவார் என்பது பொதுப்பலனாகச் சொல்லப்பட்டாலும், உரிய பரிகாரங்களைச் செய்து அவர் தரும் சோதனைகளைக் கடந்தோமேயாகில் விலகும் நேரத்தில் அற்புதமான நற்பலன்களையும் அள்ளித் தருவார் என்பதில் ஐயமில்லை. சுறுசுறுப்பைத் தரும் செவ்வாயை நட்சத்திர அதிபதியாகக் கொண்டிருக்கும் நீங்கள் அடுத்து வரும் மூன்று ஆண்டு காலமும் சற்று நிதானித்துச் செயல்பட வேண்டியது அவசியம். 2021 நவம்பர் முதல் ஒரு வருட காலத்திற்கு குருவின் பார்வையைப் பெறுவதால் நீங்கள் அனுபவிக்க உள்ள சிரமங்களின் தாக்கம் குறையும்.

நிதி : இரண்டாம் இடமாகிய தன ஸ்தானத்தின் மீது சனியின் பார்வை விழுவதால் பொருளாதார முன்னேற்றத்தில் தடங்கல் உண்டாகக் காண்பீர்கள். பொன் ஆபரணங்கள், சொத்துப் பத்திரங்கள் மற்றும் அலுவலகக் கோப்புகள் ஆகியவற்றை பத்திரப்படுத்தி வைக்கும்போதே ஒரு தாளில் எழுதி வைத்துக்கொள்வது நல்லது. அதே போன்று பிரயாணத்தின் போதும் ஞாபக மறதியின் காரணமாக பொருளிழப்புகள் உண்டாகக்கூடும் என்பதால் தொலைதூரப் பிரயாணத்தின்போது சரியான துணையை உடன் அழைத்துச் செல்வதும் நல்லது.


குடும்பம் : இரண்டாம் இடமாகிய வாக்கு ஸ்தானத்தின் மீது சனி பகவானின் நேரடிப் பார்வை விழுவதால் வாயிலிருந்து உங்களையும் அறியாமல் கடுஞ்சொற்கள் வெளிப்படலாம். இதனால் குடும்பத்தினரோடு கருத்து வேறுபாடு தோன்றும். உங்களை நேசிப்பவர்களும் மனதளவில் உங்களை விட்டு விலகிச் செல்வார்கள். உங்களுக்கு மிகவும் விருப்பமான உணவு வகைகளை நேரத்திற்கு உட்கொள்ள இயலாது போவதால் மனதில் ஒரு வித விரக்தியான எண்ணம் குடிபுகும். தனது மனநிலையை குடும்பத்தினர் புரிந்துகொள்ளவில்லையே என்ற ஏக்கம் மனதில் உருவாகும்.

கல்வி : மாணவர்கள் தங்கள் கல்வி நிலையில் முன்னேற்றம் காண கடின உழைப்பினை வெளிப்படுத்த வேண்டியிருக்கும். அஷ்டமத்துச் சனியின் பலன்களை அனுபவிக்கும்போது ஞாபகமறதியினால் தேர்வினில் சிரமத்தினை சந்திக்க நேரிடும். பாடங்களைப் படிக்கும்போது சனியின் தாக்கத்தினால் சிந்தனைச் சிதறலும், மனம் ஒரு நிலையில் இல்லாது அலைபாய்வதும், வீண் குழப்பமும் உண்டாகும். பாடங்களை மிகுந்த கவனத்துடன் உள்வாங்கிப் படித்து ஒரு முறைக்கு இருமுறை எழுதிப் பார்ப்பது நல்லது.
பெண்கள் : அடுத்தவர்களின் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி இருத்தல் நலம். இருவருக்கிடையே மத்யஸ்தம் செய்யப்போய் நீங்கள் மாட்டிக்கொள்ளும் வாய்ப்பு உண்டு. இந்த சிரமமான நேரத்தில் உங்களுக்குத் துணை நிற்பவர் வாழ்க்கைத்துணை மட்டுமே. எந்த ஒரு செயலையும் வாழ்க்கைத்துணையின் ஆலோசனையின்படி செய்து வாருங்கள்.நீங்கள் வெறுப்பைக் காட்டினாலும், உங்களின் மனதினைப் புரிந்துகொண்டு நீங்கள் செய்ய நினைக்கும் காரியங்களை அவர் செய்து முடிப்பார். அவரது வார்த்தைகள் உங்களுக்கு புதிய தெம்பினை ஊட்டும்.

ஆரோக்யம் : அஷ்டமத்துச் சனியின் காலம் உடல்நிலையில் பல்வேறு பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும். சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்கள், மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் தலையெடுக்கலாம். ஒற்றைத் தலைவலி, கண் எரிச்சல் ஆகியவற்றைத் தவிர்க்க அவ்வப்போது துளசி தீர்த்தம் அருந்தி வருவது நல்லது. உடல்நிலையில் உண்டாகும் சிறு மாற்றத்தினையும் அலட்சியப்படுத்தாது உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியமாகிறது.


தொழில் : ஜீவன ஸ்தானம் ஆகிய 10ம் இடத்தின் மீது சனி பகவானின் சிறப்புப் பார்வை விழுவதால் தொழில்முறையில் அனுகூலம் காண்பீர்கள். தொழிலில் ஸ்திரத்தன்மை உருவாகும். உண்மையான உழைப்பு நற்பெயரைப் பெற்றுத் தரும். ஆயினும் சிறு லாபத்திற்காக அதிக உழைப்பினை வெளிப்படுத்த வேண்டியிருக்கும். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கவில்லையே என்ற வருத்தம் மனதில் இருந்துவரும். நிச்சயமாக சனி பகவான் இறுதியில் பெருத்த லாபத்தினைத் தந்துவிட்டுச் செல்வார். தொழிலதிபர்கள் தங்களிடம் பணிபுரியும் தொழிலாளர்களை அனுசரித்துச் செல்ல வேண்டியது அவசியமாகிறது. சனியினால் உண்டாக உள்ள பலன்களை நினைத்து வருந்தாது கடமையைச் சரிவர செய்தீர்களேயாகில் அவரது துணை என்றும் இருந்து வரும்.

பரிகாரம் : சனி தோறும் எள் முடிச்சிட்ட விளக்கினை ஏற்றி வைத்து சனைஷ்சரனை வழிபட்டு வாருங்கள்.

திருவாதிரை : பொது : சனி பகவானின் எட்டாம் இடத்து வாசம் நினைத்த காரியம் எளிதில் நடைபெறாமல் இழுபறியைத் தரும் நிலையை உருவாக்கும். தாம் சரியாகச் செய்தாலும் வெற்றி கிடைக்கவில்லையே என்ற ஆயாசம் மனதில் தோன்றுவதைத் தவிர்க்க இயலாது. நிறைய அனுபவப் பாடங்களைக் கற்றுக் கொள்வீர்கள். பொறுப்புகள் அதிகரிக்கும். பணிச்சுமை நாளுக்கு நாள் கூடும் என்பதால் அவ்வப்போதைய பணிகளை காலம் தாழ்த்தாது உடனுக்குடன் முடித்துவிடுவது நல்லது. பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டால் சமாளிக்க இயலாத அளவிற்கு சுமை கூடிவிடும் என்பதையும் நினைவில் கொள்ளவும். அன்றாடம் செய்ய வேண்டிய பணிகளை எழுதி வைத்துக்கொண்டு செயல்படுவது நல்லது. முயற்சிகளில் தடை, உற்றார் உறவினர்களை விட்டுப் பிரிதல், உடல்நலக் குறைவு, நற்பெயருக்குக் களங்கம் போன்ற சிரமங்களை மனோதைரியத்துடனும், தன்னம்பிக்கையுடனும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

நிதி : புதிய சொத்து வாங்கும் முயற்சியை சிறிது காலத்திற்கு ஒத்தி வைப்பது நல்லது. ஞாபகமறதிப் பிரச்சினையால் பல விஷயங்களில் இழப்பினை சந்திக்க நேரலாம் என்பதை கவனத்தில் கொள்ளவும். குறைந்த விலையுடைய பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்கும் சூழல் தோன்றலாம் என்பதால் பணம் சம்பந்தமான முக்கியமான விவகாரங்களுக்குத் தனித்துச் செல்வது நல்லதல்ல. அதே நேரத்தில் அடுத்தவர்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு ஒதுங்கியிருப்பதும் கூடாது. சரியான துணையுடன் இணைந்து செய்யும் பணிகளில் வெற்றி கிட்டும்.

குடும்பம் : குடும்ப நலனையே குறிக்கோளாகக் கொண்ட உங்களுக்கு இந்த நேரத்தில் குடும்பத்தினரை விட்டு பிரிந்திருக்க வேண்டிய வாய்ப்பு தோன்றலாம். முயற்சிகளில் வெற்றி கிட்டாதபோது உண்டாகும் விரக்தியினை உங்களைச் சார்ந்தவர்களின் மீது வெளிப்படுத்துவீர்கள். வாழ்க்கைத்துணை ஒருவர் மட்டுமே உங்களுக்குத் துணை நிற்பார் என்பதால் அவரோடு உங்கள் எண்ணங்களை பரிமாறிக் கொள்வது நல்லது.

கல்வி : அஷ்டமத்துச் சனியின் காலம் என்பதால் கல்வி நிலையில் ஒரு சில இடைஞ்சல்களை சந்திக்க நேரலாம். மறதிக்கு ஆளாகும் வாய்ப்பு உள்ளதால்  ஒருமுறைக்கு இருமுறை எழுத்துப்பயிற்சியை மேற்கொள்வது அவசியம். தேர்வு நடைபெறும் நேரத்தில் மற்ற கிரஹங்கள் சாதகமான இடத்தில் சஞ்சரித்தால் கவலை கொள்ளத் தேவையில்லை. சிறப்பான மதிப்பெண்களைப் பெற்று வெற்றி காண்பீர்கள். தாவரவியல், நுண்ணுயிரியல், கேட்டரிங் டெக்னாலஜி, மெரைன் இன்ஜினியரிங் போன்ற துறையில் உள்ள மாணவர்கள் அபார வளர்ச்சியைக் காண்பார்கள்.

பெண்கள் : பணம் சார்ந்த முக்கியமான விவகாரங்களில் தனித்துச் செயல்படுவது நல்லதல்ல. வாழ்க்கைத்துணைவர் அல்லது நெருங்கிய நண்பர்களுடன் இணைந்து செயல்படுங்கள். அடுத்தவர்களின் குடும்ப விவகாரங்களில் மத்தியஸ்தம் செய்வதைத் தவிர்க்கவும். இடம், பொருள் அறிந்து பேசுவது உத்தமம். பொதுவாக அதிகம் பேசாது அமைதி காப்பது நலம். பிள்ளைகளின் வாழ்வினில் சுபநிகழ்வுகளுக்கான வாய்ப்பினைக் காண்பீர்கள்.

ஆரோக்யம் : அஷ்டமத்துச் சனியினால் அவ்வப்போது உடல்நிலையில் சிறு சிறு பிரச்சினைகளைக் காண நேரிடலாம். அவ்வப்போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவையும், கொலஸ்ட்ராலின் அளவையும் பரிசோதித்து வருவது அவசியம். 2021ம் வருடத்தின் பிற்பாதியில் உடல்நிலையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். நரம்புத்தளர்ச்சி, உடலில் சோர்வு, கைகால் குடைச்சல் போன்ற பிரச்சினைகள் இந்த நேரத்தில் பிரதானமாக இருந்து வரும்.

தொழில் : நேர்மையான உழைப்பின் காரணமாக செய்யும் தொழிலில் ஸ்திரத்தன்மை உருவாகும். உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் முக்கியமான கோப்புகளை எங்காவது வைத்துவிட்டு ஞாபகமறதியின் காரணமாக அவதிப்பட நேரலாம். ஆயினும் நீங்கள் சம்பாதித்திருக்கும் நற்பெயர் உங்களுக்குத் துணை நிற்கும். சிறுதொழில் செய்வோர் அதிக உழைப்பினை வெளிப்படுத்தி குறைந்த லாபத்தினைக் கண்டு வருவார்கள். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கவில்லையே என்ற வருத்தம் மனதில் இருந்துவரும். தொழிலதிபர்கள் தங்களிடம் பணிபுரியும் தொழிலாளர்களை அனுசரித்துச் செல்ல வேண்டியது அவசியமாகிறது. வியாபாரிகள் புதிய நுணுக்கங்களைப் பயன்படுத்தினாலும் வெற்றி காண சிறிது காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். தொழில்முறையில் போட்டி, பொறாமையின் காரணமாக பல்வேறு இடைஞ்சல்களை சந்திக்க வேண்டியிருக்கும்.
பரிகாரம் : சனி தோறும் விநாயகப்பெருமானுக்கு சிதறு தேங்காய் உடைத்து வழிபடவும்.

புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள் : பொது : அஷ்டமத்துச் சனியின் காலத்தே முயற்சிகளில் தடை, உற்றார் உறவினர்களை விட்டுப் பிரிதல், உடல் நலக் குறைவு, நற்பெயருக்குக் களங்கம் போன்ற பலன்களை அனுபவிக்க நேரிடும் என்று சொல்வார்கள். ஆனாலும் ஜனன ஜாதக ரீதியாக தற்காலம் சிறப்பான தசாபுக்தி நடக்கக் காண்பவர்கள் மேற்சொன்ன பலன்களின் தாக்கத்தினை குறைவாக அனுபவிப்பார்கள். அஷ்டமத்துச்சனியின் அந்திம காலத்தில் சிறப்பான நற்பலன்களைக் காண்பீர்கள் என்பது உறுதி. அதுவரை அவர்தரும் சோதனைகளைப் பொறுத்துத்தான் ஆக வேண்டும்.அவர் அளிக்கும் அனுபவங்களை வாழ்க்கைப்பாடமாகக் கொள்ள வேண்டும்.

நிதி : பொருளாதார ரீதியாக அதிக சிரமத்திற்குள்ளாக நேரிடும். கொடுத்த வாக்கினைக் காப்பாற்ற மிகுந்த சிரமப்படுவீர்கள். 2021ம் ஆண்டின் இறுதியில் இருந்து கடன் சுமைகள் சற்று குறையும். எதிர்பாராத நேரத்தில் திடீரென்று சொத்துப் பிரச்சினைகள் தலைதூக்கும் வாய்ப்பு உண்டு. வெளியூர் பயணத்தின்போது ஞாபக மறதியின் காரணமாக பொருளிழப்பு உண்டாகும் வாய்ப்பு உள்ளதால் மிகுந்த கவனத்துடன் இருப்பது அவசியம். சேமிக்கும் முயற்சியில் தேக்கநிலை உண்டாகக் காண்பீர்கள்.

குடும்பம் : பிள்ளைகளின் நடவடிக்கைகளில் அதிக கவனம் தேவை. அவர்களோடு அதிக நேரத்தினை செலவிட இயலாது போகலாம்.


கல்வி : மாணவர்கள் தங்களுக்கு உண்டாகும் ஞாபக மறதியினைப் போக்க தீவிர எழுத்துப்பயிற்சியில் இறங்க வேண்டியது அவசியம். கம்ப்யூட்டர் சயின்ஸ். அக்கவுண்டன்சி, காமர்ஸ், ஆடிட்டிங் போன்ற துறையைச் சார்ந்த மாணவர்கள் நல்ல முன்னேற்றத்தினைக் காண்பார்கள். ஆசிரியர்களிடம் நல்லபெயர் வாங்கினால் மட்டுமே சிறப்பான மதிப்பெண்களைப் பெறமுடியும் என்பதை நினைவில் கொள்ளவும்.

பெண்கள் : குடும்பத்து பிரச்சினைகளை வெளியே சென்று பேசுவதால் தொல்லைகள் உண்டாகும். முன்பின் தெரியாத மாற்றுமொழி பேசும் பெண்மணியின் நட்பு அநாவசிய பிரச்சினைகளை உருவாக்கும். கணவர் வழி உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உங்கள் நட்சத்திர அதிபதி ஆகிய குருவின் பார்வை குடும்ப ஸ்தானத்தின் மீது விழுவதால் குடும்பத்தினை மிகுந்த பொறுப்புடன் நடத்திச் செல்வீர்கள்.

ஆரோக்யம் : அஷ்டமத்துச் சனியின் காலத்தில் மருத்துவ செலவுகளைத் தவிர்ப்பது கடினமே. என்றாலும் ஆரோக்கியமான உணவு முறையின் மூலம் உடல்நிலையை காக்க இயலும். எண்ணெய் பலகாரங்களைத் தவிர்க்க வேண்டியது அவசியம். அல்சர், வயிற்றுவலி பிரச்சினைகளால் சற்று சிரமம் காண நேரிடும். வண்டி வாகனங்களை இயக்கும்போது அதிக எச்சரிக்கை தேவை.

தொழில் : உடன்பணிபுரிவோர்களுடன் ஒத்துப்போவது அவசியமாகிறது. ஜூலை மாத வாக்கில் தேவையற்ற இடமாற்றத்தினால் சிரமங்களை சந்திக்கும் வாய்ப்பு உண்டு. ஆயினும் உத்யோகத்தில் பதவி உயர்வு உண்டாகும். கூட்டுத்தொழிலில் உள்ளவர்களுக்கு நல்ல லாபம் கிடைத்தாலும் பார்ட்னர் வழியில் சிரமத்தினை எதிர்கொள்ள நேரிடும். வியாபாரிகள் வெளியில் இருந்து வர வேண்டிய கடன் பாக்கிகளை வசூல் செய்ய இயலாமல் தவிப்பார்கள். மளிகை, பலசரக்கு கடை, ஹோட்டல், தின்பண்டங்கள் வியாபாரம் ஆகிய தொழில்கள் உயர்வடையும். தாங்கள் அடையும் லாபத்தை மீண்டும் செய்கின்ற தொழிலிலேயே முதலீடு செய்ய வேண்டியிருக்கும். விவசாயிகளுக்கு நஞ்சைப் பயிர்களை விட புஞ்சைப் பயிர்கள் லாபத்தினைத் தரும்.

பரிகாரம் : குருமகான்களை வழிபட்டு வரவும். குடும்ப புரோஹிதருக்கு வஸ்திர தானம் செய்யவும். தக்ஷிணாமூர்த்தி வழிபாடு நன்மை தரும்.

 
மேலும் சனிப்பெயர்ச்சி பலன்! (27.12.2020 முதல் 20.12.2023 வரை) »
temple news
அஸ்வனி : பொது : இதுநாள் வரை பாக்ய ஸ்தானம் ஆகிய ஒன்பதாம் வீட்டில் சனியைக் கொண்டிருந்த உங்களுக்கு இந்த ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4ம் பாதங்கள் : பொது : ‘அஷ்டமத்துச் சனி’எனும் கஷ்டமான சூழ்நிலையிலிருந்து விடுபட்டு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4ம் பாதம் : பொது : கடக ராசிக்கு ஏழாம் இடமாகிய மகர ராசிக்குள் இடம் பெயர்ந்து உங்களை கண்டச்சனி ... மேலும்
 
temple news
மகம் : பொது : இதுவரை ஐந்தாம் இடத்தில் வசித்து வந்த சனி பகவான் தற்போது ஆறாம் வீட்டிற்கு இடம் பெயர உள்ளதால் ... மேலும்
 
temple news
உத்திரம் 2, 3 4ம் பாதங்கள் : பொது : அர்த்தாஷ்டம சனியின் தாக்கத்தினால் அவதிப்பட்டு வந்த உங்களுக்கு இந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2022 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar