Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

மிதுனம் :  பொறுத்தார் பூமியாள்வார் மிதுனம் : பொறுத்தார் பூமியாள்வார் சிம்மம் :  வெற்றி மீது வெற்றி வந்து சேரும் சிம்மம் : வெற்றி மீது வெற்றி வந்து ...
முதல் பக்கம் » சனிப்பெயர்ச்சி பலன்! (27.12.2020 முதல் 20.12.2023 வரை)
கடகம் : சுறுசுறுப்பு அவசியம்
Share
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 டிச
2020
16:46

புனர்பூசம் 4ம் பாதம் : பொது : கடக ராசிக்கு ஏழாம் இடமாகிய மகர ராசிக்குள் இடம் பெயர்ந்து உங்களை கண்டச்சனி என்னும் நிலைக்கு உள்ளாக்குகிறார் சனி பகவான். கண்டச்சனி என்பது சற்று சிரமத்தினைத் தரக்கூடிய பலன்களை உண்டாக்கும் என்றாலும் கடமை தவறாமல் செய்படுபவர்களுக்கு நண்பன் சனி பகவான் என்பதால் கவலை கொள்ளத் தேவையில்லை. மிகுந்த ஈடுபாட்டுடன் வாழ்க்கையை ரசித்து அனுபவிக்கும் உங்களை சனி பகவானின் சோதனைகள் பக்குவப்படுத்தும்.  சனி தனது நேரடி பார்வையின் மூலம் சுகத்தினைக் குறைத்து நன்மை, தீமைகளை உணர்த்தி சுறுசுறுப்பாகச் செயல்படுவதன் அவசியத்தினை உணர்த்துவார்.

நிதி : பிரயாணத்தின்போது கொண்டுசெல்லும் பொருட்களின் மீது கவனம் வைப்பது நல்லது. ஞாபக மறதியினால் ஒரு சில இழப்புகளுக்கு ஆளாகலாம். கண்டச்சனியின் காலத்தில் கண்டிப்பாக வட்டிக்குப் பணம் கொடுக்கல், வாங்கலைத் தவிர்ப்பது நல்லது. நண்பர்களுக்கு பொருளாதார ரீதியாக உதவி செய்வதில் தவறில்லை. ஆனால் வட்டியின் மூலம் வருமானம் காண்பதைத் தவிர்ப்பது நல்லது. பண விவகாரத்தில் உங்களோடு நட்புறவு கொண்டிருந்த நபர் ஒருவர் உங்களின் எதிரியோடு உறவாடும் வாய்ப்பு உண்டு.

குடும்பம் : குடும்ப உறுப்பினர்கள் உங்கள் எதிர்பார்ப்பிற்கு மாறாக செயல்படுகிறார்கள் என்ற எண்ணம் வலுக்கும். கண்டச்சனியின் பிரதானமான பலனாக வாழ்க்கைத்துணைக்கு தோஷம் உண்டாகும் என்று சொல்வார்கள். முக்கியமாக வாழ்க்கைத்துணையின் உடல்நிலையிலும், மனநிலையிலும் உங்களின் உதவி அவருக்குத் தேவைப்படும். தம்பதியருக்குள் தோன்றும் பிணக்குகளில் நீங்களே அதிகம் விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டியிருக்கும். அவரது குடும்பத்தாரிடம் உங்களின் மதிப்பு குறையலாம்.

கல்வி : மாணவர்களின் கல்வி நிலையைப் பொறுத்தவரை குருவுடன் இணையும் சனி பகவான் துணை நிற்பார். சரியான புள்ளிவிபரத்துடன் படித்து மிகுதியான மதிப்பெண்களைப் பெறுவார்கள். அறிவியல், இன்ஜினியரிங் மற்றும் ஆராய்ச்சித்துறை மாணவர்கள் சிறப்பான நற்பலன்களைக் காண்பார்கள்.

பெண்கள் : குடும்பத்தில் அநாவசிய செலவுகளைத் தடுக்கும் முயற்சியில் ஓரளவிற்கு வெற்றி காண்பீர்கள். பிறந்த வீட்டு வழி உறவினர்கள் உங்களால் லாபம் காண்பார்கள். பாகப்பிரிவினை போன்ற விவகாரங்களில் சகோதரர்களுடன் விட்டுக்கொடுத்துச் செல்வீர்கள். சதா உழைத்து வரும் நீங்கள் கிடைக்கும் ஓய்வினைப் பயன்படுத்திக் கொள்ளத் தெரியாது உங்களுக்கு சிறிதும் சம்பந்தமில்லாதவர்களின் பிரச்னைகளில் மூக்கை நுழைத்து மனக்குழப்பம் கொள்ளும் வாய்ப்பு உண்டு. குடும்ப விசேஷங்களில் கூடுதல் பொறுப்பினை சுமக்க நேரிடும்.

உடல்நிலை : உடல்நிலையைப் பொறுத்த வரை கணுக்கால், முழங்கால் ஆகியவற்றில் உண்டாகும் வலியை அலட்சியப்படுத்தாது உடனுக்குடன் மருத்துவரை அணுகி தகுந்த சிகிச்சை பெறுவது நல்லது. குருவின் சாதகமான பார்வை இருக்கும் வரை மூட்டு வலி பிரச்னைகள் கட்டுக்குள் இருந்து வரும். 2021 டிசம்பர் மாதம் முதல் சற்று சிரமத்திற்கு உள்ளாவீர்கள்.


தொழில் : உத்யோகஸ்தர்கள் கடமையைக் கண்ணும் கருத்துமாகச் செய்து வருவார்கள். அலுவலகத்திற்கு சரியான நேரத்திற்குச் செல்ல இயலாத வகையில் பல்வேறு தடைகளை சந்திக்க நேரிடலாம். இவற்றை சனிபகவானின் சோதனையாகக் கருதி மனம் தளராது செய்ய வேண்டிய கடமையை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டீர்களேயானால் தடைகள் எளிதில் விலகக் காண்பீர்கள். அலுவல் பணியில் முழுதிருப்தி காண்பீர்கள். உத்யோக ரீதியாக தூரதேசம் செல்லும் வாய்ப்பு உண்டு. தொழிலதிபர்கள், வியாபாரிகள் தொழிலை அபிவிருத்தி செய்யும வாய்ப்பு உருவாகும். ஜீவன ஸ்தானத்திற்கு 10ல் சனி வருவதால் சுயதொழிலிலும், கூட்டுத்தொழிலிலும் மிகுதியான லாபத்தினைப் பெற்றுத் தருவார். உங்களின் தனித்திறமை காரணமாக சிறப்பான தனலாபத்தினைக் காண்பீர்கள். உழைப்பே உயர்வுதரும் என்பதற்கு உதாரணமாகத் திகழ்வீர்கள். ஏற்றுமதி இறக்குமதி சார்ந்த தொழில்கள் மிகுந்த ஏற்றம் காணும்.

பரிகாரம் : சனி தோறும் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி வழிபட்டு வாருங்கள்.

பூசம் : பொது : கண்டச்சனியின் காலத்தில் நுழைய உள்ள நீங்கள் சனி பகவானைப் பற்றி கவலை கொள்ளத் தேவையில்லை. 2021 டிசம்பர் வரை உங்கள் ராசியின் மீது குருவின் பார்வை விழுவதால் உங்களது செயல்களில் சனியினால் தடையேதும் உண்டாகாது. மாறாக செயல்திறன் அதிகரிக்கும். முக்கியமாக தொழில்முறையில் சிறப்பான முன்னேற்றத்தினைக் காண உள்ளீர்கள். சனியின் ஆதிக்கம் பெற்ற ஒரு நபரின் துணையினைக் கிடைக்கப் பெறுவீர்கள். அவரோடு இணைந்து நீங்கள் செய்யும் காரியங்கள் உங்கள் புகழினை உயர்த்துவதோடு சிறப்பான தனலாபத்தினையும் பெற்றுத் தரும். ஏழில் நிற்கும் குரு பகவான் சனியை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பார். தனக்கென்று ஒரு சில விதிமுறைகளை விதித்துக் கொண்டு அதிலிருந்து சிறிதும் வழுவாது செயல்பட்டு வருவீர்கள்.

நிதி : பொருளாதார முன்னேற்றத்தில் சனியின் பார்வையினால் சிறிது சரிவினைச் சந்திக்க நேரலாம். ஆயினும் இன்னும் ஒரு வருட காலத்திற்கு குரு பகவானின் பார்வை விழுவதால் ஆடம்பர செலவுகள் குறைந்து சேமிப்பு உயரக் காண்பீர்கள். கடன் கொடுக்கல் வாங்கலை முற்றிலுமாகத் தவிர்ப்பது நல்லது. அடுத்தவர்களுக்கு உதவி செய்யும்போது அவர்களின் தரம் அறிந்து உதவுவது நல்லது. நீங்கள் சற்றும் எதிர்பாராத வகையில் உங்களுக்கு மிகவும் நெருக்கமான நபரின் மூலமாக பண விவகாரங்களில் நம்பிக்கை துரோகத்தினை சந்திக்க நேரலாம்.


குடும்பம் : குடும்பத்தில் சுபகாரியங்கள் நடப்பதற்கான வாய்ப்பு உண்டு. உறவினர்கள் நமது எதிர்பார்ப்பினை நிறைவேற்றவில்லையே என்ற மனவருத்தம் தோன்றக்கூடும். வாழ்க்கைத்துணையின் உடல்நிலையிலும், மனநிலையிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். தம்பதியருக்குள் கருத்து வேறுபாடு தோன்றும் காலத்தில் நீங்களே அதிகம் விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டியிருக்கும்.

கல்வி : மாணவர்களின் கல்வி நிலையைப் பொறுத்தவரை சனி பகவான் துணை நிற்பார். வினாவிற்கேற்ற விடையினை சரியான புள்ளிவிபரத்துடன் வெளிப்படுத்தி மிகுதியான மதிப்பெண்களைப் பெறுவார்கள். பள்ளி மாணவர்களைப் பொறுத்த வரை தங்கள் எழுத்து வேகத்தினை மேம்படுத்திக் கொள்ள கூடுதல் பயிற்சியில் ஈடுபட வேண்டியது அவசியம். ஏரோநாட்டிக்ஸ், மெரைன் இன்ஜினியரிங் மற்றும் ஆராய்ச்சித்துறை மாணவர்கள் சிறப்பான நற்பலன்களைக் காண்பார்கள்.

பெண்கள் : தெய்வீக நம்பிக்கைகளின் துணைகொண்டு குடும்பப் பிரச்னைகளை முடிவிற்குக் கொண்டு வருவதில் முன்னேற்றம் காண்பீர்கள். அக்கம்பக்கத்தினரிடம் பழகும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். அந்நியப் பெண்களிடம் அதிக கவனம் தேவை. பிள்ளைகளின் முன்னேற்றத்தில் உங்கள் பங்களிப்பு முக்கியத்துவம் பெறும்.
உடல்நிலை : உடல்நிலையைப் பொறுத்த வரை கணுக்கால், முழங்கால் ஆகியவற்றில் உண்டாகும் வலியை அலட்சியப்படுத்தாது உடனுக்குடன் மருத்துவரை அணுகி தகுந்த சிகிச்சை பெறுவது நல்லது. கண்பார்வையில் ஒரு சில கோளாறுகள் தோன்றக்கூடும். ஒரு சிலருக்கு கண்ணில் அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்கான வாய்ப்பு உண்டு. மருத்துவச் செலவுகள் அவ்வப்போது தோன்றி மறையும். உடல்நிலையில் தோன்றும் சிறுபிரச்னைகளையும் அலட்சியப்படுத்தாது உடனுக்குடன் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று நடக்க வேண்டியது அவசியமாகிறது.

தொழில் : தொழில்முறையில் ஓய்வில்லாமல் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். சனி பகவான் ஏழாம் இடத்தில் ஆட்சி பெற்ற நிலையில் அமர்ந்திருப்பது சிறப்பான முன்னேற்றத்தைத் தரும். கூட்டுத்தொழில் லாபகரமான முறையில் இருந்து வரும். ரியல் எஸ்டேட் தொழிலில் உள்ளவர்கள் சற்று நிதானித்து செயல்படவேண்டியது அவசியம். மருத்துவத்துறையில் எலும்புமுறிவு சிகிச்சை மருத்துவர்கள் சாதனை படைப்பார்கள். காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் ஓய்வில்லாது பணியாற்ற வேண்டியிருக்கும். இயந்திரங்கள் சார்ந்த தொழில் சிறப்பான தனலாபத்தினைப் பெற்றுத் தரும். அரசியல்வாதிகளின் முன்னேற்றத்திற்குத் தடையாக ஒரு சில நபர்களின் குறுக்கீடுகள் தோன்றக்கூடும். ஆயினும் தடைகளைத் தாண்டி அரசு அதிகாரிகள், காவல்துறையினர், நீதித்துறையினர் ஆகியோரின் துணையுடன் பொதுக்காரியங்களில் வெற்றியினைக் காண்பீர்கள்.

பரிகாரம் : பட்டாபிஷேகக் கோலத்தில் உள்ள ஸ்ரீராமர் படத்தினை வைத்து வழிபட்டு வாருங்கள்.

ஆயில்யம்: பொது : ஸப்தம ஸ்தானத்தில் சனி நின்ற பலனாக தூரதேசம் செல்லுதல், மனக்குழப்பம், வாழ்க்கைத்துணைக்கு தோஷம் ஆகியவை கூறப்பட்டிருந்தாலும், ஆயில்ய நட்சத்திரகாரர்களைப் பொறுத்த வரை தொழில்முறையில் ஒரு சில மாற்றங்களைக் காண உள்ளீர்கள். நீங்கள் படபடவென்று பேசும் வார்த்தைகள் மற்றவர் மனதினைப் புண்படுத்தக்கூடும். இயற்கையாக நீங்கள் மனதிற்கு சரியென்று பட்டதை ஒளிவு மறைவின்றி எதைப்பற்றியும் கவலைப்படாது பேசிவிடுவீர்கள். இதனால் வீண்வம்பில் மாட்டிக்கொள்வதற்கான வாய்ப்பு உண்டு. பேசும் வார்த்தைகளில் மிகுந்த கவனம் தேவை. வசதி, வாய்ப்புகள் இருந்தும் சரியான நேரத்திற்குச் சுவையான உணவு உட்கொள்ள இயலாது போகும்.
நிதி : அடுத்தவர்களுக்காக பொறுப்பினை ஏற்றுக் கொள்வதையும், தனது பொருளை அடமானம் வைத்து அவர்கள் பட்ட கடனை அடைப்பதையும் முடிந்த வரை தவிர்க்கவும். அவ்வாறு செய்யும் பட்சத்தில் பொருளிழப்பு உண்டாவதை தவிர்க்க முடியாது.

குடும்பம் : குடும்பப் பொறுப்புகளை இழுத்துப்போட்டுக் கொண்டு செய்வீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். டிசம்பர் மாதத்திற்குப் பிறகு குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். பிள்ளைகளை நிதானித்துச் செயல்படும்படி அவ்வப்போது அறிவுரை சொல்லி வாருங்கள். உடன்பிறந்தோரிடமிருந்து பரஸ்பர உதவி இல்லாவிடினும் மிகுந்த ஈடுபாட்டுடன் உங்களால் இயன்றதை அவருக்குச் செய்வீர்கள்.

கல்வி : வித்யாகாரகன் புதனின் சாரத்தினைப் பெற்றிருக்கும் உங்களுடைய அசாத்தியமான ஞாபக சக்தி உங்களுக்கு துணை நிற்கும். வேகமாக எழுதுவதில் பயிற்சி பெற்றால் சிறப்பானதொரு வெற்றி நிச்சயம். தாவரவியல், விவசாயம், புவியியல் சார்ந்த படிப்புகளைப் படித்து வரும் மாணவர்கள் அபரிமிதமான வளர்ச்சியைக் காண்பீர்கள்.
பெண்கள் : குடும்பத்தில் நிலவி வந்த பிரச்னைகள் உங்களால் தீர்விற்கு வரும். இதுநாள் வரை எதிரிகளாக இருந்து வந்த உறவினர்கள் உங்கள் தரப்பு நியாயத்தை உணர்ந்து மீண்டும் நல்லுறவு கொள்வார்கள். கணவரின் சிக்கனமாக செலவழிக்கும் குணம் உங்களை மன வருத்தத்திற்கு உள்ளாக்கும். அதே நேரத்தில் பிள்ளைகளுக்காக நீங்கள் செய்யும் அநாவசிய செலவுகளை தவிர்க்க வேண்டியது அவசியம்.

உடல்நிலை : தலைவலி, பித்தம் போன்ற பிரச்னைகளால் ஆரோக்யத்தில் சிறு தொந்தரவுகளைச் சந்தித்து வருவீர்கள். டென்ஷனைக் குறைத்துக் கொண்டாலே போதும், உடல் ஆரோக்யத்துடன் இருக்கும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். தேவையற்ற சிந்தனைகளும் அநாவசியமான கற்பனைகளும்தான் உங்களுக்கு எதிரிகள் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். கவனக் குறைவின் காரணமாக சிறு பிரச்னைகளை சந்திக்க நேரும் என்பதால் வண்டி வாகனங்களை இயக்கும்போது அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது.
தொழில் : உழைப்பதற்கு ஏற்ற பலன் இல்லையே என்ற வருத்தம் 2021ம் ஆண்டு ஜூன் மாதம் வரை இருந்து வரும். வரும் ஜூலை மாதத்தில் ஊதிய உயர்வுடன் கூடிய பதவி உயர்விற்கான வாய்ப்பும் எதிர்பார்த்துக் காத்திருந்த இடமாற்றத்திற்கான வாய்ப்பும் உண்டு. ஆயினும் இன்னமும் கூடுதல் பொறுப்புகளை சந்திப்பீர்கள். அலுவலகத்தில் உங்களுக்குக் கீழ் பணிபுரிவோர் உங்களை ரோல்மாடலாகக் கொண்டு செயல்படுவார்கள். உணவுப் பண்டங்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் நல்ல தனலாபத்தினைக் காண்பார்கள். தடைபட்டு வரும் காரியங்களை வெற்றியோடு செய்து முடிப்பீர்கள். எல்லா விஷயங்களிலும் உங்களுக்கு போட்டியாக செயல்படுபவர்களை சாமர்த்தியமான அணுகுமுறையால் வெற்றி காண்பீர்கள்.

பரிகாரம் : பாம்பணையில் பள்ளிகொண்டிருக்கும் பெருமாளை வழிபட்டு வாருங்கள். ஏகாதசி விரதம் நன்மை தரும்.

 
மேலும் சனிப்பெயர்ச்சி பலன்! (27.12.2020 முதல் 20.12.2023 வரை) »
temple
அஸ்வனி : பொது : இதுநாள் வரை பாக்ய ஸ்தானம் ஆகிய ஒன்பதாம் வீட்டில் சனியைக் கொண்டிருந்த உங்களுக்கு இந்த ... மேலும்
 
temple
கார்த்திகை 2, 3, 4ம் பாதங்கள் : பொது : ‘அஷ்டமத்துச் சனி’எனும் கஷ்டமான சூழ்நிலையிலிருந்து விடுபட்டு ... மேலும்
 
temple
மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள் : பொது : ‘கண்டச் சனி’ எனும் நிலையிலிருந்து வெளியேறி ‘அஷ்டமத்துச் சனி’ எனும் ... மேலும்
 
temple
மகம் : பொது : இதுவரை ஐந்தாம் இடத்தில் வசித்து வந்த சனி பகவான் தற்போது ஆறாம் வீட்டிற்கு இடம் பெயர உள்ளதால் ... மேலும்
 
temple
உத்திரம் 2, 3 4ம் பாதங்கள் : பொது : அர்த்தாஷ்டம சனியின் தாக்கத்தினால் அவதிப்பட்டு வந்த உங்களுக்கு இந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2022 www.dinamalar.com. All rights reserved.