Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரிஷபம் : மார்கழி பலன் கடகம் : மார்கழி பலன் கடகம் : மார்கழி பலன்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மிதுனம் : மார்கழி பலன்
எழுத்தின் அளவு:
மிதுனம் : மார்கழி பலன்

பதிவு செய்த நாள்

16 டிச
2020
07:12


மிருகசீரிடம் 3, 4ம் பாதம் :     ராசிநாதன் புதனின் பார்வை பலமும், நட்சத்திர அதிபதி செவ்வாயின் ஜெய ஸ்தான சஞ்சாரமும் வெற்றியைப் பெற்றுத் தரும். அதே நேரத்தில் டிச. 30 முதல் புதன் எட்டாம் வீட்டில் குரு மற்றும் சனியோடு இணைவதால் எதிர்பாராத தடைகளை சந்திக்க நேரிடும். முக்கியமான பணிகளை டிசம்பர் மாத இறுதிக்குள் செய்துமுடிப்பது நன்மை தரும். முக்கியமான பிரச்னைகளில் முடிவெடுக்க இயலாது தடுமாறுவீர்கள். சுற்றியுள்ளோர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகப் பேசி உங்களைக் குழப்புவர். எந்தப் பிரச்னையாக இருந்தாலும் உங்கள் மனதில் முதலில் தோன்றும் வழிமுறையைப் பின்பற்றுவது நல்லது. குடும்பத்தில் சலசலப்புகள் தோன்றி மறையும். குறைந்த விலையுள்ள பொருட்களை கூடுதல் விலை கொடுத்து வாங்க நேரிடும். கடைத்தெருவிற்கு செல்லும்போது தகுந்த துணையோடு செல்வது நல்லது. நகைச்சுவைக்காக பேசும் வார்த்தைகள் உங்களையும் அறியாமல் அடுத்தவர் மனதைப் புண்படுத்தக்கூடும். உடன்பிறந்தோர் வழியில் எதிர்பார்த்த உதவி கிட்டும். சுற்றியுள்ளோர் உங்கள் உதவியை நாடி வருவர். வயது முதிர்ந்த உறவினர் ஒருவரின் மூலம் குடும்ப சம்பிரதாயங்களுக்கான பொருளினை அறிந்து கொள்வீர்கள். பிள்ளைகள் உங்களை எதிர்த்துப் பேசுவதாக எண்ணி மனம் வருந்துவீர்கள். வாழ்க்கைத்துணையின் ஆலோசனைகள் பயன் தரும். நிலுவையில் இருக்கும் வழக்கு விவகாரங்கள் முடிவிற்கு வரும். வேலைக்குச் செல்வோர் அலுவலகத்தில் அனைவரையும் அனுசரித்துச் செல்ல வேண்டியது அவசியம். மாணவர்கள் ஆசிரியரின் ஆலோசனையால் பயன் பெறுவர். தடுமாற்றத்தைத் தவிர்த்து வெற்றி காண வேண்டிய மாதம் இது.


பரிகாரம் : சூரிய நாராயண சுவாமியை வணங்கி வாருங்கள்.
சந்திராஷ்டமம் : டிச. 17, ஜன. 13

திருவாதிரை :  எந்த ஒரு செயலையும் துவக்கினோமா, முடித்தோமா என்றில்லாமல் நம்பி இறங்கிய காரியம் இழுத்துக்கொண்டே செல்வது லேசான மன வருத்தத்தைத் தரும். குருவின் எட்டாம் இடத்து வாசமும் சனியின் பெயர்ச்சி நிலையும் உங்களை மிகவும் சோதனைக்கு உள்ளாக்கும். நட்சத்திர அதிபதி ராகுவும் 12ல் நீசம் பெறுவதால் எளிதில் முடிவெடுக்க இயலாது தடுமாற்றம் கண்டு வருவீர்கள். குடும்ப உறுப்பினர்கள் நமக்கு உதவியாக செயல்படவில்லை என அவர்களோடு கருத்து வேறுபாடு கொள்வீர்கள். சிக்கலான நேரத்தில் உங்கள் சமயோஜித புத்தியினால் வெற்றி காண்பீர்கள். சுக சௌகரியங்கள் தொடரும் வகையில் பொருள் வரவு நன்றாக இருந்து வரும். ஞாபக மறதியின் காரணமாக லேசான சிரமத்திற்கு ஆளாக நேரிடும். வண்டி, வாகனங்களினால் நன்மை உண்டாகும். மாணவர்களின் கல்வி நிலை சூடு பிடிக்கும். தாயார் வழி உறவினர்கள் உங்களை நாடிவரும் சூழ்நிலை உருவாகும். உங்களது கற்பனைத்திறனும், சிந்தனைகளும் மற்றவர்களின் பாராட்டினைப் பெறும். உங்களை எதிரியாக நினைத்தவர்கள் உண்மை புரிந்து உங்களோடு நட்பு பாராட்டி உங்களை நாடி வருவார்கள். சர்க்கரை வியாதிக்காரர்கள் உடல்நிலையில் சிறப்பு கவனம் செலுத்துவது நல்லது. வாழ்க்கைத்துணையின் பெயரில் சொத்துக்கள் வாங்க முற்படலாம். நண்பர்களை நம்பி ஒப்படைத்த காரியங்களில் இழுபறியைச் சந்திக்க நேரிடும். செலவுகளைக் கட்டுக்குள் வைக்க கையிருப்பில் உள்ள பணத்தினை வாழ்க்கைத்துணையின் பெயரில் முதலீடு செய்து வைப்பது நல்லது. அலுவலகத்தில் அநாவசியமான குழப்பங்களை சந்திக்க நேரிடும். வியாபாரிகளுக்கு சீரான தன லாபம் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும். கனவுத் தொல்லையால் உறக்கம் கெடும் வாய்ப்பு உள்ளது. கலைத்துறையினர் மனதினில் இருந்து வரும் அநாவசியமான பயத்தினைத் தவிர்த்தால் வெற்றி காணும் மாதம் இது.


பரிகாரம் : அனுமனுக்கு வெண்ணெய் சாற்றி வணங்குங்கள்.

சந்திராஷ்டமம் : டிச. 18

புனர்பூசம் 1, 2, 3ம் பாதம் :  ஜென்ம நட்சத்திர அதிபதி குருவின் நீச பலமும் அஷ்டம ஸ்தான சஞ்சாரமும் சற்றே தடைகளை உருவாக்கும். டிச. 27 முதல் சனியும் எட்டில் இணைவதால் சோதனையான காலத்திற்குள் நுழைகிறீர்கள். எல்லா விஷயங்களிலும் இழுபறியான நிலை நீடிப்பதால் நேரடியாக இறங்காமல் மறைமுகமாக செய்து முடிக்க முயற்சிப்பீர்கள். உங்களால் செய்ய முடியாத செயல்களை நண்பர்களின் துணைகொண்டு செயல்படுத்தி வெற்றி காண்பீர்கள். அதே நேரத்தில் நண்பர்களும் எதிரிகளாக மாறும் வாய்ப்பு உள்ளதால் மிகுந்த எச்சரிக்கையுடன் பழக வேண்டியது அவசியமாகிறது. எதிர்பாராத திடீர் செலவுகளால் நிதிநிலைமையில் லேசான தடுமாற்றம் இருந்து வரும். சகோதரர்களுடன் வாக்குவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது. குடும்ப உறுப்பினர்கள் உங்களை விட்டு விலகிச் செல்வது போன்ற உணர்வு மனதிற்குள் குழப்பத்தினை உண்டாக்கும். மனக்குழப்பத்தை வெளியில் காட்டிக்கொள்ளாது இன்முகத்துடன் பழகி வருவீகள். வாகனங்கள் செலவினைத் தரும். அடிக்கடி ஞாபக மறதிக்கு உள்ளாவீர்கள். பணியாட்கள் உங்கள் சொல் கேளாததைக் கண்டு அவர்களைக் கடிந்துகொள்ளும் வாய்ப்புகள் உருவாகும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி கொள்வீர்கள். விருந்தோம்பலில் நற்பெயர் பெற்ற நீங்கள் இந்த மாதத்தில் உறவினர்களின் வருகையால் செலவுகளுக்கு ஆளாவீர்கள். வாழ்க்கைத்துணையின் பிடிவாதமான செயல்கள் மனதிற்கு வருத்தத்தினைத் தந்தாலும் அவரோடு விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. நீங்கள் மிக எளிதாக செய்து முடித்துவிடலாம் என்று நினைத்த சொத்து விவகாரம் ஒன்றில் தடை உண்டாவதைக் கண்டு மனம் வருந்துவீர்கள். தொழில் ரீதியாக கடும் அலைச்சலுக்கு ஆளாக நேரிடும். உடன் பணிபுரிவோரின் வேலைகளையும் நீங்களே செய்ய வேண்டிய சூழலுக்கு ஆளாவீர்கள். கலைத்துறையினர் எடுத்துக்கொண்ட பணியினை பொறுப்புடன் செய்து முடித்து பாராட்டுதலுக்கு ஆளாவார்கள். சராசரி பலனைத் தரும் மாதமிது.

பரிகாரம் : அஷ்டமி நாளில் பைரவரை வழிபட்டு வாருங்கள்.
சந்திராஷ்டமம் : டிச. 18, 19

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோஷ்டாஷ்டமி  என்பது பசுக்களைப் போற்றி வழிபடும் நாளாகும். கார்த்திகை மாத வளர்பிறை அஷ்டமி திதியில் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் வள்ளி தெய்வானை சமேத முருகன் சுவாமி சிலைகள் ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில், கந்தசஷ்டி பெருவிழாவின் இறுதி ... மேலும்
 
temple news
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், சோழர் காலத்தைச் சேர்ந்த 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிற்பங்கள் ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழாவில் திருக்கல்யாண ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar