* நல்ல எண்ணத்தால் சிறிய நன்மைகளும் பெரிய நன்மைகளாக மாறி விடும். * பொது இடங்கள், நடைபாதையில் உள்ள நிழல் தரும் மரங்களை வெட்டாதீர்கள். * நிழல் தரும் மரங்களின் அருகில் அசுத்தம் செய்யாதீர்கள். * கடன் கொடுத்து உதவுவதும் தர்மமே. * நல்ல முறையில் கடனைத் திருப்பிச் செலுத்துபவரே மேலானவர். * பணம் செலவழியும் முன் மகிழ்ச்சியுடன் தர்மம் செய்யுங்கள். * சண்டை சச்சரவை சமாதானம் மூலம் தீர்க்க முயலுங்கள். * இறை நினைவுடன் இருப்பவர் முகத்தில் ஒளி உண்டாகும். * மற்றவர் மீது குறை காண்பவன் கீழ்நிலை அடைவான். * காலம் வீணாகும் முன் நற்செயலில் ஈடுபடுங்கள். நபிகள் நாயகம்