திருநெல்வேலியில் இருந்து திருச்செந்துார் செல்லும் சாலையில் 38 கி.மீ., தொலைவிலும், ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து 7கீ.மீ., தொலைவிலும் உள்ள தலம் பெருங்குளம். நவதிருப்பதிகளில் ஒன்றாகத் திகழும் இங்கு மூலவர் வேங்கடவாணர் என அழைக்கப்படுகிறார். சனீஸ்வரருக்கு இங்கு சன்னதி கிடையாது. பெருமாளே சனிதோஷம் போக்குபவராக இருக்கிறார். சனிக்கிழமைகளில் வழிபட்டால் தோஷம் விலகி நன்மை அதிகரிக்கும்.