* செல்வம் என்றுமே நிலையானதல்ல. கிரீடங்கள் தலைமுறை தலைமுறையாக நிலைத்து வருவதில்லை.
* செல்வத்தை குவிக்கிறான் யார் வாரிசு என்று தெரியாமலேயே.
* எரிக்கும் உஷ்ணத்துடன் சூரியன் உக்கிரமாக உதயமானவுடனேயே, புல் பூண்டு மீது பட்டு அது உலர்கிறது. செடியின் பூக்கள் உதிர்ந்து அதன் அழகான வடிவம் அழிந்து போகிறது. அது போலவே செல்வந்தனும் தன் போக்குகளினால் அழிந்து போகிறான்.
* பூலோகத்தில் உங்களுக்காக பொக்கிஷங்களை சேர்க்க வேண்டாம். அதை அந்தும், துாரும் அரிக்கும். திருடர்கள் கன்னமிட்டு திருடுகிறார்கள். பணத்தை நேர்வழியில் சம்பாதிக்க வேண்டும். தன் தேவை போக மிஞ்சியதில் பிறருக்கு உதவி செய்ய வேண்டும்.