தூத்துக்குடி பெருமாள் கோயிலில் இன்று திருக்கல்யாண விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30மே 2012 11:05
தூத்துக்குடி : தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோயில் வைகாசி பெருந்திருவிழாவை ஒட்டி இன்று திருக்கல்யாணம் நடக்கிறது. மதியம் திருக்கல்யாண விருந்து நடக்கிறது. தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோயிலில் வைகாசி பெருந்திருவிழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. ஒவ்வொரு நாள் காலையில் தோளுக்கினியானில் பெருமாள் வீதி உலா வருதலும், இரவு ஒவ்வொரு வாகனத்திலும் வைகுண்டபதி பெருமாள் வீதி உலா வருதலும் நடந்து வருகிறது. விழாவையொட்டி சிறப்பு நிகழ்ச்சியாக சொற்பொழிவு, பஜனை, பரதநாட்டியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடந்து வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கருதப்படும் ஆறாம் திருவிழாவான இன்று (30ம் தேதி) திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. காலையில் தோளுக்கினியான் வாகனத்தில் வாகனத்தில் பெருமாள் வீதி உலா வருதல் நடக்கிறது. காலை 10 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேக அலங்காரங்கள் நடக்கிறது. மதியம் 12 மணிக்கு பாகம்பிரியாள் சமேத சங்கரராமேஸ்வரர் திருக்கல்யாணகுழு சார்பில் திருக்கல்யாண விருந்து நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி ராஜேந்திரன், பெருமாள் கோயில் அர்ச்சகர் வைகுண்டராமன் ஆகியோர் செய்துள்ளனர். வரும் 2ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. வரும் 4ம் தேதி 11ம் நாள் விழாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.