* கடவுள் எப்போதும் நம் அருகிலேயே இருக்கிறார். * கடவுளை சரணடைந்தால் விதியை வெல்லும் ஆற்றல் கிடைக்கும். * உங்கள் தேவைகளை நீங்களே பூர்த்தி செய்யுங்கள். * கர்ம வினையைப் போக்கும் சக்தி பக்திக்கு மட்டுமே உண்டு. * கடவுளின் நாமத்தை ஜபித்தால் உடலும், உள்ளமும் துாய்மை பெறும். * நாம் முன்னேறுவதோடு மற்றவரையும் முன்னேற்ற கல்வி அவசியம். * சரியான சந்தர்ப்பத்தில் எச்சரிப்பவனே உண்மையான நண்பன். * முயற்சியும், உழைப்பும் இல்லாதவன் வாழ்வில் முன்னேற முடியாது. * இன்பத்தைப் போல துன்பத்தையும் கடவுள் அளித்த பிரசாதமாக ஏற்க வேண்டும். * மதம் பிடித்த யானை போன்றது மனசு. அதை கட்டுப்பாட்டுடன் வைத்திருங்கள். * கள்ளம் கபடம் உள்ளவர்கள் ஆன்மிக வளர்ச்சி அடைய முடியாது. * பண விஷயத்தில் பெரும்பாலான மனிதர்கள் நம்பிக்கையுடன் நடப்பதில்லை. * சோம்பலாக இருக்கும் போது தான் தீய எண்ணங்கள் தோன்றுகின்றன. * கடவுள் ஒருவர் மட்டுமே உண்மை. மற்றவை எல்லாம் பொய். * துாய மனம் கொண்டவர்கள் உலகையும் துாய்மையாகவே காண்பர்.