பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு: பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25டிச 2020 06:12
வைகுண்ட ஏகாதிசியை முன்னிட்டு வைஷ்ணவ தலங்கள் அனைத்திலும் இன்று சொர்ககவாசல் திறக்கப்பட்டது. பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கத்தில் அதிகாலை 4.30 மணியளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
அதே போல் கோவை பெரிய கடை வீதியில் உள்ள ஸ்ரீ லட்சுமி நாராயண வேணுகோபால சுவாமி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நடந்தது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம் பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவில் பெருமாள் பரமபதம் வாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அவிநாசி அடுத்த கருவலூர் கருணாகர வெங்கட ரமண பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு சொர்க்க வாசல் வழியாக பக்தர்களுக்கு பெருமாள் அருள்பாலித்தார். பக்தர்கள் பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.