மின்னொளியில் ஜொலித்த தேவாலயங்கள்: கிறிஸ்துமஸ் விழா குதூகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25டிச 2020 06:12
தேவாலயங்களில்,கிறிஸ்துமஸ் விழாவையொட்டி, கடந்த 24ம் தேதி நள்ளிரவு முதல் 25ம் தேதி அதிகாலை வரை சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
ஏசு கிறிஸ்து பிறந்த நாளையொட்டி, கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் வகையில், வீடுகளில் ஸ்டார்கள் தொங்கவிடப்பட்டிருந்தன. ஏசு பிறப்பை சித்தரிக்கும் வகையில், குடில்களும் அமைக்கப்பட்டிருந்தன. சர்ச்சுகள் ஒளி விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஒளிவெள்ளத்தில் மிதந்தன. 24ம் தேதி நள்ளிரவு முதலே கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிகள் சர்ச்சுகளில் துவங்கியது. நள்ளிரவு 12.00 மணிக்கு சிறப்பு ஆராதனை நிகழ்ச்சிகள் துவங்கி, அதிகாலை வரை நடந்தது. பின், கூட்டு பிரார்த்தனை நடந்தது. விழுப்புரம் கிருஸ்து அரசர் ஆலையத்தில் கிருஸ்துமஸ் விழாவையொட்டி ஏசு குடிலில் பிறக்கும் நிகழ்ச்சி நடந்தது. கிறிஸ்மஸ் பண்டிகையையொட்டி புதுச்சேரி நெல்லிதோப்பு விண்ணேற்ப மாதா ஆலயத்தில் ஏசிபி சுவரை குடியில் வைக்கப்பட்ட நிகழ்ச்சியில் முதல்வர் நாராயணசாமி பங்கேற்றார்.