பதிவு செய்த நாள்
25
டிச
2020
06:12
திருப்பூர்: திருப்பூர், ஸ்ரீ வீரராக பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் வழியாக எம்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருப்பூர் ஸ்ரீவீரராகவ பெருமாள் கோவிலில், பரமபத வாசல் திறப்பு விழா நடைபெற்றது. அதிகாலை, 3:00 மணிக்கு, ஸ்ரீதேவி, பூமிநீளா தேவி சமதே வீரராகவ பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெறும். தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்துடன், ஸ்ரீவீரராகவ பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளினார். அதிகாலை, 5:30 மணிக்கு, சிறப்பு அலங்காரத்துடன், சொர்க்கவாசல் வழியாக பிரவேசித்து, ராஜகோபுர வாசல் வழியாக கோவிலுக்குள், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலை, 6:30 மணி முதல், பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர்.