பதிவு செய்த நாள்
31
டிச
2020
04:12
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தீர்த்தம், உபகோயில்கள் திறக்காததால் உண்டியல் காணிக்கை ரூ. 46 லட்சத்து 22 ஆயிரத்து 856 லட்சம் மட்டுமே கிடைத்தது.ராமேஸ்வரம் கோயிலில் அக்.,29க்கு பின் நேற்று சுவாமி, அம்மன் மற்றும் பஞ்சமூர்த்தி சன்னதி முன்புஉள்ள உண்டியல்களை கோயில் இணை ஆணையர் கல்யாணி முன்னிலையில் திறக்கப்பட்டது.
கோட்ட பொறியாளர்மயில்வாகனன், கண்காணிப்பாளர் கக்காரின், பேஷ்கார்கள் அண்ணாதுரை, கமலநாதன், முனியசாமி, கோயில் ஊழியர்கள் காணிக்கையை எண்ணினர். இதில் ரொக்க பணம் ரூ.46 லட்சத்து, 22 ஆயிரத்து856 ரூபாயும், தங்கம் 36கிராம், வெள்ளி 735 கிராம் காணிக்கையாக கிடைத்தது.வருவாய் இழப்பு: கொரோனாவுக்கு முன் ஒவ்வொரு மாதமும் ரொக்க பணம் ரூ. 80 முதல் 90 லட்சம் வரை காணிக்கை கிடைத்தது. ஆனால் 2 மாதத்திற்கு பின் நேற்று உண்டியல் வருவாய் குறைந்ததற்கு, கோயிலுக்குள் தீர்த்தங்கள்,உபகோயில்கள் திறக்காமல் உள்ளதால் பக்தர்கள்வருகை குறைந்து, காணிக்கையும் குறைந்தது என இந்து அமைப்பினர் தெரிவித்தனர்.